"ஸ்டாலின்தான் சிஎம்".. ஜெர்க் ஆன பொன்.ராதா.. அதை "அம்மா" கிட்ட சொல்லுங்க.. மிரண்ட மதுரை!

ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் என பொன்.ராதாவிடம் ஒரு பெண் கூறினார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு முக்கியமான சம்பவம் ஒரு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்துள்ளது.. இதனால் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தர்மசங்கடமான நிலைமைக்கு ஆளாகும் நிலைமையும் ஏற்பட்டு விட்டது.

வழக்கமாக தமிழக அரசியல் வரலாற்றில், கட்சி தலைவர்கள் விமர்சனங்கள் செய்து கொள்வது வழக்கம்.. ஒருசிலர் நாகரீக வார்த்தைகளை வீசுவார்கள்.. ஒருசிலர் எல்லை மீறி பேசுவார்கள்..

சிலசமயம், நாகரீக வார்த்தைகளை பேசுபவர்களே எல்லைமீறி பேசிவிடுவதும் உண்டு.. அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலினையும், பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாவையும் சொல்லலாம்.

ஸ்டாலின்

ஸ்டாலின்

இந்த முறை பிரச்சாரம் செய்ய குமரிக்கு ஸ்டாலின் சென்றிருந்தபோது, "பொன்.ராதாகிருஷ்ணன் அப்படின்னு சொல்றதவிட பொய் ராதாகிருஷ்ணன் தான் அவரை சொல்ல வேண்டும்" என்றார்.. உடனே கூட்டத்திலிருந்தோர் ஏதோ சத்தம் போட்டு சொன்னார்கள்.. அதற்கு ஸ்டாலின், "எல்லாரும் இப்படி கோரஸாக சொன்னால் எப்படி? யாராவது ஒருத்தர் சொல்லுங்க, எதுவுமே கேக்கல" என்றார்.

விமர்சனம்

விமர்சனம்

உடனே ஓரிருவர் எழுந்து நின்று, "பொரி உருண்டை" என்றார்கள்.. உடனே ஸ்டாலின், 'பொரி உருண்டையா ' பெரிய மனுஷன் அப்டியெல்லாம் சொல்லாதீர்கள் பாவம்... நான் பொன்.ராதாகிருஷ்ணனை, பொய் ராதாகிருஷ்ணன் என்று சொல்கிறேன் அவ்ளோதான். நீங்க சொல்றதுக்கும் நான் சொல்றதுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை" என்றார்.

 பொன்.ராதாகிருஷ்ணன்

பொன்.ராதாகிருஷ்ணன்

இதுமாதிரி ஸ்டாலின் மட்டுமில்லை.. பலமுறை பொன்.ராதாவே ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார்.. ஒருமுறை பேட்டியின்போது, "சாடிஸ்ட்" என்பது காங்கிரஸ் கட்சிக்கு பொருந்தும்.. ஸ்டாலினை விட சாடிஸ்ட் வேறு யார் இருக்க முடியும்? தயவு செய்து ஸ்டாலின் நாகாக்க வேண்டும். இல்லை என்றால் நீங்களே உங்களை அசிங்கப்படுத்திக்கொள்வீர்கள்... சாடிஸ்ட் என்ற வார்த்தை கண்ணாடியை பார்த்து துப்பியதற்கு சமம்" என்று விமர்சித்த நிகழ்வுகளும் நடந்ததுண்டு.

 சிறப்பு பூஜைகள்

சிறப்பு பூஜைகள்

இந்த அளவுக்கு எதிரும் புதிருமாக இருப்பவர்களை பற்றிதான் ஒரு செய்தி வந்துள்ளது.. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்திலுள்ள பெரும்பாலான கோயில்களில் சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது.. அந்த வகையில், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் திரண்டு வந்தனர்.. இந்த கோயிலுக்கு பொன்.ராதாகிருஷ்ணனும் வந்திருந்தார்.. அவருடன் கட்சி நிர்வாகிகளுடன் வந்தனர். தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தவர், செய்தியாளர்களிடம் "திமுக பெரிய அளவில் சரிவை சந்திக்கும்" என்று பேட்டியை தந்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

முதல்வர்

முதல்வர்

அப்போது கோயிலுக்கு வந்த ஒரு பெண், பொன்.ராதாவை பார்த்துவிட்டார்.. நேராக வந்து, பொன்.ராதாவுக்கு வணக்கம் வைத்தார்.. பதிலுக்கு பொன்.ராதாகிருஷ்ணனும் வணக்கம் சொன்னார்.. அப்போது அந்த பெண், "அடுத்த முதலமைச்சரா ஸ்டாலின்தான் வரணும்.. எங்க கஷ்டமெல்லாம் தீரணும்" என்றார். இதை கேட்டதும் பொன்.ராதா ஒரு நிமிஷம் ஷாக் ஆகிவிட்டார்.. உடனே சுதாரித்து கொண்டு, "இதை அந்த அம்மனிடம் போய் சொல்லுங்க" என்று மீனாட்சியம்மன் கோயிலை பார்த்து கை காட்டினார்.

 ஜெர்க்

ஜெர்க்

ஆனால், அந்த பெண்மணியோ, "இப்பதான் அம்மாகிட்டே சொல்லிட்டு வர்றேன்.. ஸ்டாலின்தான் முதலமைச்சரா வருவார்" என்று மறுபடியும் சொல்ல, டக்கென கையெடுத்து அவரை பார்த்து மறுபடியும் கும்பிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் அங்கிருந்து நகர்ந்தார். அந்த பெண் யார் என்று தெரியவில்லை.. ஆனால், பொன்.ராதாவுடன் இருந்த நிர்வாகிகள் உட்பட பலரும் கொஞ்ச நேரத்துக்கு ஜெர்க் ஆகி போனார்கள்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+