Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

#Exlclusive ஸ்டாலினை பார்த்து பயம்.. பாஜகவின் ‘ஸ்பெஷாலிட்டி’யே இதான்.. திமுக MLA எழிலரசன் பேட்டி!

ஸ்டாலினை பார்த்து பயந்து, பாஜக வதந்தி பரப்புகிறது என திமுக எம்.எல்.ஏ சிவிஎம்பி எழிலரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : வடமாநிலத் தொழிலாளர்கள் விவகாரத்தில் திமுக மீது குற்றம்சாட்டக் காரணம், பாஜக வரும் 2024 தேர்தலை சந்திப்பதற்கு பயந்து கொண்டிருக்கிறது. பாஜகவுக்கு எதிரான வலுவான அணியை ஸ்டாலின் முன்னெடுக்கும் நேரத்தில் வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன என நமது ஒன் இந்தியா தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார் திமுக எம்.எல்.ஏ சி.வி.எம்.பி.எழிலரசன்.

திமுக மாணவரணி செயலாளரும், எம்.எல்.ஏவுமான சி.வி.எம்.பி.எழிலரசன், வட மாநிலத் தொழிலாளர்கள் விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வட மாநில தொழிலாளர்கள் அச்சமடைந்ததற்கு திமுக காரணம் எனக் குற்றம்சாட்டிய நிலையில், சி.வி.எம்.பி.எழிலரசன் அளித்துள்ள பேட்டி வருமாறு:

திமுக காரணமா?

திமுக காரணமா?

கேள்வி : வட மாநிலத்தவர் பிரச்சனைக்கு மூலகாரணமே திமுக தான் என்றும், இந்தி தொடர்பான பிரச்சனைகளை திமுகவினர் முன்னிலைப்படுத்தியதன் விளைவே இது என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டுகிறாரே?

சிவிஎம்பி எழிலரசன் : நாங்கள் சொன்ன தகவல்களுக்கும் இப்போது பரவியிருக்கும் வதந்திகளுக்கும் சம்பந்தம் இல்லை. இந்தி தெரியவில்லை என்றால் ஏர்போர்ட்டில் குடிமக்களாகவே நடத்த மறுக்கிறார்கள் என கனிமொழி எம்.பி, பலகாலமாக இருந்து வரும் பிரச்சனையின் தாக்கத்தை வெளிப்படுத்தினார். பானி பூரி விற்கத்தான் வருகிறார்கள் எனச் சொல்வது எதற்காகவென்றால், தமிழ்நாட்டின் முன்னேற்றத்தையும், பொருளாதார ரீதியாக மற்ற மாநிலங்களின் முன்னேற்றத்தையும் ஒப்பிடுவதற்காகச் சுட்டுக்காட்டுவது. இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள், ஆனால், இந்தி தெரிந்தவர்களே இங்கு வந்து பானி பூரி விற்கிறார்கள் என்ற விமர்சனத்தைச் சொல்லியிருப்பார்கள். இந்த விஷயங்களுக்கோ, இன்று பரப்பப்பட்டிருக்கும் வதந்திகளுக்கும் சம்பந்தமே இல்லை.

அண்ணாமலைக்கு தமிழ்நாடு களம் தெரியாது

அண்ணாமலைக்கு தமிழ்நாடு களம் தெரியாது

அண்ணாமலை, பாஜகவின் மாநிலத் தலைவராக பொறுப்புடன் செயல்பட்டு, வதந்திகளை மறுத்திருக்க வேண்டும். தமிழ்நாட்டின் மீதோ, தமிழ்நாட்டு மக்களின் மீதோ, எந்தவிதமான அக்கறையும் இல்லாதவராகத்தான் அண்ணாமலை கருத்துச் சொல்லி இருக்கிறார். தமிழ்நாட்டில் 1938ல் தொடங்கியது இந்தி எதிர்ப்பு போராட்டம். அன்று முதல் இந்தி திணிப்புக்கு எதிரான மனநிலை தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்தியை திமுகவும், தமிழ்நாடும் எதிர்க்கிறது என்று தெரியாமல் எல்லாம் லட்சக்கணக்கான வட மாநிலத்தவர்கள் இங்கு வருவதில்லை. அண்ணாமலைக்கு தமிழ்நாட்டின் கள நிலவரம் தெரியாது என்பதற்கான அடையாளமாகத்தான் இன்று அவர் இப்படியான குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.

கீழ்த்தரமான அரசியல்

கீழ்த்தரமான அரசியல்

தமிழ்நாட்டில் 20 லட்சம் பேருக்கு மேல் வட மாநிலத்தவர்கள் இருக்கின்றனர். கொரோனா காலகட்டத்தில் பெரும் அச்சத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாகனங்கள் ஏதும் கிடைக்காத சூழலிலும் தங்கள் குடும்பங்களை நோக்கி நடந்தே சென்றார்கள். மீண்டும் அவர்கள் திரும்பி வந்தார்கள். அவர்களுக்கு தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு இருப்பது தெரியாதா? இந்தி பேசுவதையோ, கற்றுக்கொள்வதையோ எதிர்க்கவில்லை. இந்தியை கட்டாயமாக்குவதைத்தான் எதிர்க்கிறோம். ஒட்டுமொத்த தமிழர்களின் பண்பாடே 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பது தான். அப்பபடித்தான் இவ்வளவு காலமும் இருக்கிறது. இதை வைத்து கீழ்த்தரமான அரசியலை அண்ணாமலை முன்னெடுப்பது மிகுந்த வேதனைக்குரியது.

திமுக தீர்மானம்

திமுக தீர்மானம்

கேள்வி : வடமாநிலத்தவர்களுக்கு எதிரான மனோபாவம் இங்கு சில ஆண்டுகளாகவே உருவாகியிருக்கிறது, இதற்குக் காரணம் தமிழ்நாடு வேலை தமிழருக்கே என்ற முழக்கம் தான், 2019ல் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று தமிழ்நாடு வேலை தமிழருக்கே. வடமாநில தொழிலாளர்கள் இங்கு வரக்கூடாது என்ற பிரச்சனை எழுவது அதன் வெளிப்பாடு என்பதை அண்ணாமலை சுட்டிக்காட்டுகிறாரே..

சிவிஎம்பி எழிலரசன் : அண்ணாமலை பேசுவதற்கு முன் அவர் என்ன பேசுகிறோம் என்பதை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது தமிழ்நாட்டின் அரசு வேலைவாய்ப்புகளில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன் விளைவாக மின்சாரத்துறை வேலைவாய்ப்பில் தமிழர்கள் அல்லாதவர்கள் அதிகமாக வேலை பெற்றார்கள். தமிழர்கள் அல்லாதவர்கள் பணிபுரியும் இடங்களில் பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டது. அதை முன்வைத்தே அப்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாஜகவின் ஸ்பெஷாலிட்டி

பாஜகவின் ஸ்பெஷாலிட்டி

பாஜகவின் ஸ்பெஷாலிட்டியே பொய் பரப்புவதுதான். ஆர்.எஸ்.எஸ்ஸின் பெரிய தத்துவங்களில் முதன்மையானது பொய் தான். கோயபல்ஸின் வாரிசுகள் அவர்கள். என்ன வேண்டுமானாலும் பொய் பேசலாம், நம் நோக்கத்தை அடையவேண்டும் என்பதுதான் பாஜகவின் குறிக்கோள். மாநில அரசின் வேலைவாய்ப்புகளில் அந்த மாநில மக்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றுவதில் என்ன தவறு? அரசு வேலைகள் தவிர்த்து, விவசாயம், கட்டுமானத்துறை, ஹோட்டல்கள் என பல துறைகளில் அடித்தட்டுகளில் வேலை செய்வதில் எல்லாரும் தான் பணியாற்றுகிறார்கள். திமுக போட்ட தீர்மானம் அதுதொடர்பானதே கிடையாது. ஒரு ஹோட்டலிலோ, சலூனிலோ, கட்டிடங்கள் கட்டவோ யார் வேலை செய்யவேண்டும் என முடிவெடுக்க வேண்டியது அதன் உரிமையாளர் தான். அதைப் பற்றி தீர்மானம் நிறைவேற்ற ஒரு கட்சி முற்பட முடியாது. அது புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய விஷயமே கிடையாது.

பொய் பரப்பும் பாஜக

பொய் பரப்பும் பாஜக

நடக்காத விஷயத்தை பொய்யாகப் பரப்பி, இந்தி பேசுபவர்களை கொன்றுவிட்டார்கள் என்று பொய்யான தகவலைக் கட்டமைக்கும் வேலையை யார் செய்தார்கள் என்பதை பல தொலைக்காட்சிகள் விளக்கிச் சொல்லியிருக்கின்றன. பீகார் மாநில பாஜகவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பொய்யான தகவலை வெளியிடுகிறார்கள். பீகார் எம்.எல்.ஏ, எம்.எல்.சி ஆகியோர் அவர்களது பக்கத்திலேயே வெளிப்படையாக பொய்த்தகவலை வெளியிடுகிறார்கள். உத்தர பிரதேச பாஜக நிர்வாகியும் இதேபோன்ற தகவலை வெளியிடுகிறார். இது பொய் என்ற தகவலை சொல்லும் கடமை உள்ள அண்ணாமலை, அதை விட்டுவிட்டு, திமுக இதை செய்கிறது என்று கட்டமைக்க முயலக் காரணம், பாஜக வரும் 2024 தேர்தலை சந்திப்பதற்கு பயந்து கொண்டிருக்கிறது.

ஸ்டாலின் முயற்சிகளுக்கு எதிராக

ஸ்டாலின் முயற்சிகளுக்கு எதிராக

பாஜகவை தோற்கடிக்கப்போவது உறுதி. அதற்கான முன்னெடுப்புகளைச் செய்யப்போகும் தகுதிவாந்த தலைவர் ஸ்டாலின் என்று அகில இந்திய தலைவர்கள் பேசினார்கள். இந்தியா முழுவதும் ஒரு பெரிய கூட்டணியை உருவாக்கும் பெரும் பணியை செய்யும் தகுதி வாய்ந்த தலைவர் ஸ்டாலின் என பரூக் அப்துல்லா பேசியுள்ளார். திராவிட மாடல் ஆட்சி, இந்தியா முழுமைக்கும் தேவை என்று அகிலேஷ் பேசியுள்ளார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அத்தனை கருத்து வேறுபாடுகளைக் கொண்ட கட்சிகளையும் இணைப்பதற்கு ஒருவரால் தான் முடியும் என தேஜஸ்வி பேசியிருக்கிறார். ஸ்டாலினை அகில இந்திய தலைவர்கள் பாராட்டிப் பேசியிருக்கும் நேரத்தில், பாஜகவுக்கு எதிரான வலுவான அணியை ஸ்டாலின் முன்னெடுக்கும் நேரத்தில் இப்படியான வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+