Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பள்ளிப்பாட புத்தகங்களில் ராமாயணம், மகாபாரதம்! கல்வியை காவிமயமாக்க முயற்சி! இனிகோ குற்றச்சாட்டு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளிப்பாட புத்தகங்களில் ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை சேர்ப்பதற்கு தேசிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான என்.சி.இ.ஆர்.டி பரிந்துரைத்துள்ளதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் இனிகோ விமர்சித்துள்ளார்.

கல்வியில் எப்படியாவது காவிமயத்தை புகுத்தி விட வேண்டும் மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;

DMK Mla Inigo criticized the NCERT for recommending inclusion of Ramayana and Mahabharata in school textbooks.

''பள்ளிப்பாட புத்தகங்களில் ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை சேர்ப்பதற்கு தேசிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான என்.சி.இ.ஆர்.டி பரிந்துரைத்துள்ளது. உலகில் சில நாடுகள் கிறிஸ்தவ நாடுகளாக இருக்கலாம்; காரணம் அங்கு கிறிஸ்தவ மட்டுமே முக்கியமான மதமாக இருக்கும். இதேபோல் சில நாடுகள் இஸ்லாமிய நாடுகளாக இருக்கலாம்; காரணம் அங்கு இஸ்லாம் மதம் மட்டுமே நடைமுறையில் இருக்கும். நேபாளம் இந்து நாடு என்று சொல்கிறார்கள்; காரணம் அங்கு இந்துக்கள் மட்டுமே இருக்கிறார்கள். ஆனால் நமது இந்திய திருநாட்டின் சிறப்பு அம்சமே அதன் பன்முகத் தன்மை தான்.''

''உலகில் வேறு எந்த நாட்டிலுமே இல்லாத வகையில், பல மதங்கள்,பல இனங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள் என பல அம்சங்களைக் கொண்டது நமது இந்தியா. வானம் ஒன்றுதான்; அதில் பல வகையான நட்சத்திரங்கள் இருப்பது போல், வானவில் ஒன்றுதான்; அதில் பல வகையான வண்ணங்கள் இருப்பது போல், இந்தியா என்ற ஒற்றை தேசத்தின் கீழ் பல கலாச்சாரங்கள், பல மொழிகள், பல மதங்களைக் கொண்டது நமது இந்தியா. அதனால்தான் வானம் எத்தனை அழகானதோ, வானவில் எத்தனை அழகானதோ, அப்படி நமது இந்திய திருநாடும் பல சிறப்புகளை கொண்டதாக திகழ்கிறது. இதனை சிதைக்கத்தான் இந்துத்துவா என்ற தீப்பந்தத்தை தூக்கிக்கொண்டு அலைகிறது ஒன்றிய பாஜக அரசு. ''

''மாணவச் செல்வங்களின் பள்ளிப்பாட புத்தகங்களில் ஒரு சார்பு விஷம நெருப்பை பற்றவைக்க புறப்பட்டு இருக்கிறது. இந்துத்துவா சிந்தனையோடு ஏற்கனவே பல நகரங்களின் பெயர்கள், சட்டங்களின் பெயர்கள், திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு இருக்கும் நிலையில், மாணவச் செல்வங்களின் சிந்தனையையும் காவிக்கறையாக்கிட களம் இறங்கி இருக்கிறது மோடி அரசு. இதற்கென நியமிக்கப்பட்ட நிபுணர் குழு தற்போது அதற்கான பரிந்துரைகளை வழங்கி இருக்கிறது. ''

''ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக் கணக்கான இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்கு செல்வதாகவும், தேசப்பற்று இல்லாததே இதற்கு காரணம் என்றும் அக்குழு ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. எனவே இளைஞர்கள் மத்தியில் தேசப்பற்று, தேசத்தின் பெருமைகள் ஆகியவற்றை வளர்ப்பது அவசியம்; அதற்கு சமூக அறிவியல் பாடத் திட்டத்தில் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை சேர்க்க வேண்டும் என்றும் அந்த குழு அக்கறையோடு கூறி இருக்கிறது. வகுப்பறையில் சுவர்களில் கூட இது பற்றி எழுதவும் ஓவியங்கள் இடம் பெறவும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.''

''இதே போல் பள்ளி பாட புத்தகங்களில் நாட்டின் பெயர் இந்தியா என்று இருப்பதை பாரதம் என பெயர் மாற்றம் செய்யவும் இந்தக் குழு முடிவு செய்துள்ளது. மேலும் 3 முதல் 12 ஆம் வகுப்பு உரையிலான பாடப்புத்தகங்களில் இந்து அரசர்கள் பெற்ற வெற்றிகளை இடம்பெற செய்வது குறித்தும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகள் தேசிய பாடத்திட்டம் மற்றும் கற்றல் கற்பித்தல் திட்ட குழுவின் பரிசீலனைக்கு பிறகு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் இறுதிச் செய்யப்படும் என தெரிகிறது.''

''ஆட்சியில் அமர்ந்த நாள் முதலே ஒன்றிய பாஜக அரசு இதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் அதற்குள் முடிந்தவரை இது போன்ற சித்தாந்த சித்து வேலைகளை முடித்து விட வேண்டும் என்பதில் அது கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்கிறது. ''

''படித்த ஒரு இளைஞன் வெளிநாட்டுக்கு செல்கிறான் என்றால், அங்கு அவனுக்கான அங்கீகாரம் கிடைக்கிறது; படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கிறது; வேலைக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கிறது; குறிப்பாக மதக்கலவரங்களோ, ஜாதி மோதல்களோ இல்லாத ஒரு தேசம் கிடைக்கிறது; அது இங்கே கிடைப்பதற்கு முயற்சி செய்தாலே இளைஞர்களின் வெளிநாட்டு இடம்பெயர்வை தடுக்கலாம்.''

''ஆனால் இங்கேயோ ஜாதியை சொல்லி திட்டுவது, மதத்தால் அவனை இம்சிப்பது, இட ஒதுக்கீட்டை பறிப்பது, மத மோதல்களை கட்டவிழ்ப்பது என ஒருபுறம் பாசிச அட்டூழியங்களை செய்து கொண்டு மறுபுறம் இப்படி ஒரு காரணத்தை சொல்வதா? அதற்கு பள்ளி பாடப் புத்தகங்களில் ஒரு மதம் சார்ந்த கருத்துக்களைப் புகுத்தி மாணவ பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சை செலுத்துவதா?''

''நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், கல்வி வளர்ச்சிக்கும், சமூக மேம்பாட்டிற்கும், தொழில் வளர்ச்சிக்கும் எத்தனையோ தடைகளும் இடையூறுகளும் இருந்து கொண்டிருக்கின்றன. உண்மையிலேயே மனசாட்சி கொண்ட ஒரு நல்ல அரசாங்கமாக இருந்தால், இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்கிற உண்மையான அக்கறை இருந்தால், நாட்டு மக்கள் அனைவரும் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத ஒரு சமூகமாக நிம்மதியாக வாழ வேண்டும் என்கிற சிந்தனை இருந்தால் ஒரு அரசு முதலில் இந்த தடைகளை தகர்ப்பதற்கு என்ன வழி என்று தான் யோசிக்க வேண்டும். ''

''ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு யாருமே பேசாத சமஸ்கிருத மொழியை தூக்கி பிடிப்பது, அலகாபாத் என்ற பெயரை பிரயாக்ராஜ் என மாற்றி வரலாற்றை சிதைப்பது, குற்றவியல் நடைமுறை சட்டங்களின் பெயர்களை ஹிந்தியில் மாற்றி அதன் தன்மையை குழப்புவது, இப்போது பள்ளிப்பாடப் புத்தகங்களை குறி வைத்திருப்பது போன்ற குசும்புத்தனங்களை செய்வதால் யாருக்கும் எந்த நன்மையும் விளைந்து விடப் போவதில்லை.''

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+