திநகர் தவெக வேட்பாளர் புஸ்ஸி ஆனந்துக்கு நான் பிரச்சாரம் செய்கிறேனா? எம்எல்ஏ கருணாநிதி விளக்கம்
சென்னை: திமுக சிட்டிங் எம்எல்ஏவான ஜெ.கருணாநிதி, தனக்கு சீட் கிடைக்காத அதிருப்தியில் திநகர் தவெக வேட்பாளர் புஸ்ஸி ஆனந்தின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்யவுள்ளார் என்ற தகவல்களை அவர் மறுத்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்படுகின்றன. திமுக 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இதற்கான வேட்பாளர்களை முதல்வர் ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை அறிவித்திருந்தார். சென்னை திநகர் தொகுதி எம்எல்ஏவாக இருந்து வரும் கருணாநிதி, மறைந்த முன்னாள் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் சகோதரர் ஆவார்.
கருணாநிதி, சென்னை தென்மேற்கு திநகர் கிழக்கு பகுதி திமுக செயலாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் திநகர் தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என கருணாநிதி எதிர்பார்த்து காத்திருந்தார்.
ஆனால் திநகர் தொகுதியில் போட்டியிட கருணாநிதிக்கு வாய்ப்பு வழங்கவில்லை, அவருக்கு பதிலாக திநகர் தொகுதி வேட்பாளராக திமுக எம்எல்ஏ அன்பழகன் மகன் ராஜா அன்பழகன் அறிவிக்கப்பட்டார்.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் விரக்தியில் இருந்த கருணாநிதி, திநகர் கிழக்கு பகுதி திமுக செயலாளர் பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மதிப்பிற்குரிய தலைவர் அவர்களுக்கு வணக்கம்,
தியாகராயர் நகர் கிழக்கு பகுதி செயலாளராக பல ஆண்டு காலம் கடுமையாக உழைத்துள்ளேன். அந்த உழைப்பிற்கும்,நேர்மைக்கும், கழகம் மேல் இருந்த பற்றிற்கும் தற்போது மதிப்பில்லாத காரணத்தினால் எனது கழக பகுதி செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன்.

எனக்கு ஒத்துழைப்பு அளித்த கழகத் தலைவர் அவர்களுக்கும் பிற நிர்வாகிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த கழக பகுதி செயலாளர் பதவிக்கு கோ.சு.மணியை நியமித்து உத்தரவிட்டார் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்.
இந்த நிலையில் தன்னை தலைமை அழைத்து சமாதானம் செய்யாததால் கருணாநிதி கவலையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் தனது அண்ணன் மகன் ராஜா அன்பழகனின் வெற்றி வாய்ப்புக்கு வேலை செய்யாமல் தவெக சார்பில் களமிறங்கும் புஸ்ஸி ஆனந்தின் வெற்றிக்கு பாடுபட கருணாநிதி முடிவு செய்துள்ளார் என்றும் அவருக்காக பிரச்சாரம் செய்வது என்றும் அவர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்தன.
இதை கருணாநிதி மறுத்துள்ளார். அவர் தனது எக்ஸ்சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: "என்னை எந்த அரசியல் கட்சியுடன் இணைத்து பேசப்படும் தகவல்கள் அனைத்தும் முற்றிலும் தவறானவை. நான் எந்த அரசியல் கட்சியிலும் சேர்ந்து செயல்படவில்லை, செயல்படவும் போவதில்லை." என தெரிவித்துள்ளார்.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications