சைதாப்பேட்டை திமுக எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் மகன் அன்பழகன் கொரோனாவால் உயிரிழப்பு- ஸ்டாலின் இரங்கல்
சென்னை: சைதாப்பேட்டை தொகுதி திமுக எம்.எல்.ஏ. மா. சுப்பிரமணியத்தின் இளையமகன் அன்பழகன் (வயது 34) கொரோனாவால் உயிரிழந்துள்ளார். அன்பழகன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை தொகுதி திமுக எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியத்துக்கு 2 வாரங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு இருந்தது. அதேபோல் அவரது மனைவிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து இருவரும் சிகிச்சை பெற்றனர். இந்த நிலையில் மா. சுப்பிரமணியத்தின் இளைய மகன் அன்பழகனுக்கும் கொரோனா உறுதியானது. இதனால் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அன்பழகன் இன்று உயிரிழந்தார். சென்னையில் திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன், அமமுக பொருளாளர் வெற்றிவேல் ஆகியோர் கொரோனாவால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மா.சு.வு.க்கு இப்படி ஒரு சோதனையா? - ஸ்டாலின்
மா. சுப்பிரமணியன் மகன் அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல்:
அருமைச் சகோதரர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்களின் மகன் அன்பழகன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது, என் நெஞ்சை உறைய வைத்துவிட்டது. ஏற்கனவே உடல்நலம் குன்றி இருந்த அன்பழகனை - திரு. மா.சுப்பிரமணியன் அவர்களும், அவரது துணைவியார் திருமதி. காஞ்சனா சுப்பிரமணியன் அவர்களும், கண்ணின் மணி போல் இத்தனை ஆண்டுகள் காத்துவந்ததை கொரோனா வந்து பறித்துச் சென்று விட்டது.
மா.சு. இணையர்க்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. ஊரார்க்கு ஒன்று என்றால், உடனே ஓடோடிப் போய் நிற்கும் மா.சு.வுக்கு, இப்படி ஒரு சோதனையா? செல்வன் அன்பழகன் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்! இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி?












Click it and Unblock the Notifications