என் பெயரே சரவணன்.. தங்கத்தேரை மீட்டது பெருமை.. பாஜகவுக்கு திமுக எம்எல்ஏ பதிலடி
சென்னை: என் பெயரே சரவணன்தான். தங்கத்தேரை மீட்ட பெருமை எனக்கு உண்டு என பாஜக நிர்வாகி சீனிவாசனுக்கு திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணன் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் கடவுள் முருகப்பெருமான் கோடிக்கணக்கான மக்களால் வணங்கப்படுபவர். அறுபடை வீடுகள் அமைத்து மக்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.

முருகப்பெருமானின் கந்த சஷ்டி கவசத்தை கறுப்பர் கூட்டம் என்ற YouTube சேனலில் தனிநபர் ஒருவர் கொச்சைப்படுத்தி இருந்த நிலையில் நாங்கள் எல்லாம் அங்கமாக இருக்கும் தி.மு.க சார்பாக, தலைமை கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தும் தி.மு.க தொண்டர்கள் 1 கோடி பேர் இந்துக்கள் என்ற உண்மையை மறைக்க முயலும் காவி கூட்டத்திற்கு தெளிவுபடுத்திய பிறகும் பூத கண்ணாடி கொண்டு தேடினாலும் தெரியாத ஸ்ரீனிவாசன் போன்ற நபர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள மீண்டும் கையில் எடுத்திருப்பது வெட்கக்கேடானது.
அவர் கூற்றின்படி அறுபடை வீடுகளில் ஐந்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் தி.மு.கவினர் என்பது உண்மை. திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரானவுடன் முருகப்பெருமானின் தங்கத்தேரினை மீட்டெடுத்தது எனது முதல் செயல். என்னுடைய பெயரே முருகனின் பெயரான சரவணன் தான்.
தி.மு.க வேட்பாளர்களுக்கு அருள் பாலித்த முருகக்கடவுள் நோட்டா ஸ்ரீனிவாசன் போன்றவர்களுக்கு ஏன் அருள் பாலிக்கவில்லை? ஒருவேளை அவர்களின் போலி பக்தியை முருகக்கடவுள் ஏற்கவில்லையோ? ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பது தான் இறைத்தத்துவமோ?

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள், அப்படி மக்களும், மகேசனும் அளித்த தீர்ப்பினை முருக பக்தர் என்று சொல்லிக் கொள்ளும் நோட்டா அவர்கள் ஏற்காமல் ராஜினாமா செய்ய வேண்டும், பாவமன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிதற்றுகிறார்.
உண்மையில் இவரைப் போன்ற போலிகள் தான் இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்க வேண்டும். இன்னும் நண்பர் கடந்த தேர்தல் தோல்வியில் இருந்து மீளவில்லை போலும். அடுத்த தேர்தலில் டெபாசிட் திரும்பப் பெற வாழ்த்துக்கள் என்றார்.
-
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார்












Click it and Unblock the Notifications