உதயநிதிக்கு எதிரான தேர்தல் வழக்கு.. அதிரடியாய் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்.. ஆனாலும் ஒரு சிக்கல்?
சென்னை : திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தொடரப்பட்ட தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் கசாலியை விட 69 ஆயிரத்து 355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து, தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான எம்.எல்.ரவி தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

உதயநிதிக்கு எதிராக வழக்கு
தன் மீதான குற்ற வழக்கு விவரங்களை முழுமைமையாக தெரிவிக்கவில்லை என்றும், அந்த வேட்புமனுவை ஏற்றது தவறு என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு பல முறை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் தரப்பில் வாதங்களை தொடங்காமல் கால அவகாசம் கேட்கப்பட்டது.

நீதிபதி எச்சரிக்கை
உரிய நேரத்தில் வாதங்களை தொடங்காவிட்டால், மனுவின் தன்மைக்கு ஏற்ப உத்தரவு பிறப்பக்கப்படும் என நீதிபதி எச்சரித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் வழக்கை வாபஸ் பெறுவதாகவும், நீதிமன்றம் அனுமதிக்க வேண்டுமெனவும் மனுதாரர் ரவி தரப்பில் தெரிவிக்கபட்டது.

உதயநிதி தரப்பு வாதம்
உதயநிதி தரப்பில் மனுத்தாக்கல் செய்தபோது செலுத்த வேண்டிய வைப்பு தொகையை செலுத்தாததன் அடிப்படையில் தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும், வாபஸ் பெற அனுமதிக்க கூடாது எனவும் வாதிடப்பட்டது.

வழக்கு தள்ளுபடி
இதையடுத்து நீதிபதி, வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து இருந்தார். இன்று இந்த வழக்குகளில் தீர்ப்பளித்த நீதிபதி பாரதிதாசன், வைப்புத்தொகை செலுத்தாமல் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெற அனுமதி மறுத்ததுடன், தேர்தலை எதிர்த்த இரு வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். பிரேமலதா என்ற வாக்காளர் தொடர்ந்த வழக்கு மட்டும் நிலுவையில் உள்ளது.
-
அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து? மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு! -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல் -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications