Stalin Is More Dangerous ..கண்ணுக்கு கண்..பல்லுக்கு பல் - ஜெயக்குமார் கைது.. டி.ஆர்.பி. ராஜா ட்வீட்!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டது குறித்து திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா ட்வீட் செய்துள்ளார்.
நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றபோது, சென்னை ராயபுரத்தில் 49-வது வார்டில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் திமுகவினர் கள்ள ஓட்டுப் போடுவதாக அதிமுக-வினர் புகாரளித்தனர்.
இதையடுத்து அந்த வாக்குச்சாவடிக்கு சென்றார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். கள்ளஓட்டு போடவந்ததாக கூறப்பட்ட நபரை ஓட்டிப்போட விடாமல் தடுத்திருக்கிறார்.
இந்நிலையில் அந்த நபரை அரைநிர்வாணாக்கி தாக்கியதாக ஜெயக்குமார் மீது புகார் கொடுக்கப்பட்டது. இந்தச் சூழலில் திமுகவைச் சேர்ந்த நரேஷ் என்பவர் ஜெயக்குமார் மீது புகாரளித்தார். இதையடுத்து தண்டையார்பேட்டை போலீசார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

" வாக்கு எண்ணிக்கை மையங்களில் அ.தி.மு.க.வினர் எந்த அளவுக்கு எல்லை மீறிச் செல்வார்கள் என்பதை அ.தி.மு.க ஆட்சியில் 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின்போது நேரில் கண்டு அறிந்தவன் நான். முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் அவர்கள் சட்டத்தைத் தன் கையிலே எடுத்துக்கொண்டு, தி.மு.கழக நிர்வாகியின் சட்டையைக் கழற்றி அவமானப்படுத்தியிருக்கிறார்.
கழகம் இதனைச் சட்டரீதியாக நிச்சயம் எதிர்கொள்ளும். அப்போது அவர்களின் சட்டை மட்டுமல்ல, மொத்தமும் கழன்று போகிற வகையில் அம்பலப்படுவார்கள் என்பது நிச்சயம்.:" எனவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஜெயக்குமார் மீது பெறப்பட்ட புகாரை அடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ-வும், திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளருமான டி.ஆர்.பி.ராஜா, ஜெயக்குமார் கைது குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், '' கண்ணுக்கு கண், பல்லுக்கு பல். Stalin Is More Dangerous. சொன்னா யாரு கேக்குறா'' என ட்வீட் செய்துள்ளார்.
திமுக நபரைத் தாக்கியதாக ஜெயக்குமார் குறித்து சர்ச்சை தொடங்கியதுமே ராஜா ட்வீட் செய்திருந்தார். அதில், ''ஜெயக்குமார் செய்த காரியத்துக்கு பலனை அனுபவித்தே தீரவேண்டும். திமுக இதனைச் சட்டரீதியாக நிச்சயம் எதிர்கொள்ளும்.
அப்போது அவர்களின் சட்டை மட்டுமல்ல, மொத்தமும் கழன்று போகிற வகையில் அம்பலப்படுவார்கள் என்பது நிச்சயம் என கழகத் தலைவர் சொல்லி இருக்கிறார். இனி கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்'' என ட்வீட் செய்திருந்தார். தற்போது ஜெயக்குமார் கைதுக்குப் பிறகும் இதைக் குறிப்பிட்டு மீண்டும் ட்வீட் செய்துள்ளார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications