ஜெர்க் ஆன உதயநிதி.. "அப்டியா சொல்றீங்க.. இப்ப பாருங்க".. 2 மணி நேரத்தில் சபாஷ்.. திணறிய திட்டக்குடி
உதயநிதியின் செயலால் திட்டக்குடி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
சென்னை: ஏரியை பார்வையிட வந்த உதயநிதியிடம், புலம்பி தள்ளிவிட்டனர் விவசாயிகள்... இதனால் வெறும் 2 மணி நேரத்தில் அதிரடியில் இறங்கி திட்டக்குடி மக்களை அசர வைத்துவிட்டார் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின்.
Recommended Video
சேப்பாக்கம் தொகுதி உதயநிதி ஸ்டாலின், தன் தொகுதியையும் தாண்டி பிற மாவட்டங்களிலும் மக்கள் நலனில் கவனம் செலுத்தி வருகிறார்.. அந்த வகையில், இவர் பாணி அரசியலை பலரும் உற்றுநோக்கியே வருகின்றனர்.
அந்த வகையில், சமீபத்தில் திட்டக்குடியில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

உதவிகள்
இதில், முடி திருத்தும் தொழிலாளர்கள், ஆட்டோ, கார், வேன் ஓட்டுநர்கள், சலவைத் தொழிலாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 2,500 பேருக்கு நலத் திட்ட உதவிகளை திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இதற்கு பிறகு, திட்டக்குடி வெலிங்டன் ஏரியை உதயநிதி ஸ்டாலின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பார்வையிட சென்றார்..

விவசாயிகள்
அதற்கு அங்கிருந்த விவசாயிகள், "இந்த ஏரி பல வருடமாக தூர் வாராமலேயே இருக்கிறது.. இந்த ஏரியின் கரைகளையும் பலப்படுத்தி பல காலமாகிவிட்டது.. இது சம்பந்தமா எத்தனையோ முறை அதிகாரிகள்கிட்ட மனு தந்தோம்.. ஆனால், யாருமே இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.. இப்ப கூட நீங்க வந்திருக்கீங்க.. எங்க குறைகளை கேக்கறீங்க.. ஆனால் நடவடிக்கை எடுப்பீங்களான்னு கூட எங்களுக்கு தெரியாதே" என்றனர்.

கோரிக்கை
உதயநிதி, தங்கள் ஊரில் உள்ள ஏரியை பார்க்க வந்திருக்கிறார் என்று தெரிந்ததுமே அந்த கிராம மக்கள் திரண்டு வந்தனர்.. மக்கள் தன்னை தான் சந்திக்க வந்துள்ளனர் என்பதை அறிந்து கொண்ட உதயநிதியும், அவர்களிடம் தானாகவே சென்று, இங்கே என்னென்ன குறைகள் இருக்கிறது? என்று கேட்டறிந்தார்.

மகிழ்ச்சி
விவசாயிகள் இப்படி சொல்வார்கள் என்று உதயநிதியே எதிர்பார்க்கவில்லை.. அதனால், உடனடியாக அந்த ஏரியை தூர்வாரும் நடவடிக்கையை மேற்கொள்ளும்படி அங்கிருந்த அதிகாரிகளுக்கு சொன்னார்.. அடுத்த 2 மணி நேரத்தில் அந்த ஏரி தூர்வாரும் பணியையும் துவக்கி வைத்துவிட்டார்.. அத்துடன் விவசாயிகள் சொன்ன அனைத்து கோரிக்கை மனுக்களையும் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன் என்று உறுதி தந்து, அந்த மனுக்களை அதிகாரிகளிடம் தந்தார். ஒரு வார்த்தை சொன்னதுமே, உதயநிதி இப்படி அதிரடியில் இறங்கிவிட்டாரே என்று அந்த கிராம மக்கள் நெகிழ்ந்துவிட்டனர்..!
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
விஜய் VS உதயநிதி VS அண்ணாமலை.. தமிழ்நாடு அரசியலில் புதிய இன்னிங்ஸ்.. யாருக்கு சாதகம் தெரியுமா? -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications