டீ கொண்டு வந்து கொடுத்த எம்.பி...! திமுக முப்பெரும் விழாவில் ருசிகர நிகழ்வு
Recommended Video
திருவண்ணாமலை தொகுதி மக்களவை உறுப்பினர் அண்ணாதுரை திமுக முப்பெரும் விழாவில் கலந்துகொண்ட முக்கிய நிர்வாகிகளுக்கு தானே டீ கொண்டு வந்து கொடுத்ததோடு, அவர்களுக்கு தேவையான பணிவிடையும் செய்தார்.

வேலு ஆதரவாளர்
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக இருப்பவர் அண்ணாதுரை எம்.பி. இவர் எ.வ.வேலுவின் தீவிர ஆதரவாளர். வேலு மீது அதீத நம்பிக்கையும், மரியாதையும் அண்ணாதுரை வைத்ததன் விளைவு, அவரை தனது நெருங்கிய வட்டத்திற்குள் வைத்துள்ளார் எ.வ.வேலு.கடந்த 2014 தேர்தலில் திருவண்ணாமலையில் போட்டியிட்டு அதிமுகவின் வனரோஜாவிடம் வெற்றிவாய்ப்பை பறிகொடுத்த அண்ணாதுரையை, மீண்டும் 2019-ல் களமிறக்கி வெற்றிபெறச் செய்தார் எ.வ.வேலு.
டீ கொடுத்த எம்.பி.
வழக்கமாக திமுக நிகழ்ச்சிகளில், பிரபல ஹோட்டல் ஒன்றில் டீ, காஃபி உள்ளிட்ட ஸ்நாக்ஸ்கள் ஆர்டர் கொடுக்கப்பட்டு பெறப்படும். ஹோட்டல் ஊழியர்களே அதனை பரிமாறுவர். ஆனால் நேற்று சற்று வித்தியாசமான காட்சி கண்ணில் பட்டது. விழா மேடையில் அமர்ந்திருந்த டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு அண்ணாதுரை எம்.பி.யே டீ கொண்டு வந்து கொடுத்தார்.
டி.ஆர்.பாலு விளக்கம்
இதில் விநோதம் என்னவென்றால் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு அண்ணாதுரையை யாரென்று தெரியவில்லை. உடனடியாக அருகில் அமர்ந்திருந்த டி.ஆர்.பாலு, இவர் இந்த தொகுதி எம்.பி.ம்மா என அறிமுகம் செய்து வைத்தார். ஓ..அப்படியா என வியந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் இவர் ஏன் டீ எடுத்துட்டு வருகிறார்..எனக் கேட்க அவர் எளிமையான ஆளு என டி.ஆர்.பாலு விளக்க என இப்படி ருசிகர நிகழ்வு நடைபெற்றது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications