முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு.. திமுக எம்பி ரமேஷுக்கு ஜாமீன்!
சென்னை : முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கைதான திமுக எம்.பி. ரமேஷுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய கோவிந்தராஜ் மகன் தொடுத்த வழக்கில் நவம்பர் 23ம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

பாமக நிர்வாகி கொலை
கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பம் கிராமத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி. ரமேஷுக்கு சொந்தமாக முந்திரி ஏற்றுமதி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த மேல்மாம்பட்டை கிராமத்தை சேர்ந்த தொழிலாளி கோவிந்தராஜ் செப்டம்பர் 19ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவர் பாமக நிர்வாகியும் கூட. இதையடுத்து தனது தந்தை கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது மகன் அளித்த புகாரில் கோவிந்தராஜ் மரணம் கொலை வழக்காக பதியப்பட்டது.

எம்பி ரமேஷ் சரண்
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கடலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் அக்டோபர் 11-ம் தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் அவர் நீதிமன்ற உத்தரவுப்படி கடலூரில் சிறையில் அடைக்கப்பட்டார். கோவிந்தராஜின் மகன், தந்தை கொலையுண்ட வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடவேண்டும் என்று வழக்குத் தொடர்ந்தார்.

சிபிசிஐடி வசம் வழக்கு
இதையடுத்து கோவிந்தராஜ் கொலை சிபிசிஐடி விசாரிக்குமாறு தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்தார். பின்னர் இந்த வழக்கு கூடுதல் துணை கண்காணிப்பாளர் கோமதி தலைமையில் சிபிசிஐடி போலீஸார் வசம் செப்டம்பர் 28 ஆம் தேதி ஒப்படைக்கப்பட்டது. திருச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த சிபிசிஐடியினரும் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஜாமீன் கோரி மனு
இதற்கிடையே தன்னை ஜாமினில் விடுவிக்குமாறு ரமேஷ் கடலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனு நிராகரிக்கப்பட்டடதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் திமுக எம்.பி. ரமேஷ். ஆனால் இந்த வழக்கு விசாரணை நியாயமாக நடைபெறவில்லை என்றும், வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அல்லது தற்போதைய சிபிசிஐடி அதிகாரியை மாற்ற வேண்டும் என்றும் கோவிந்தாராஜின் மகன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

விசாரணை அதிகாரி மாற்றம்
இந்நிலையில் ரமேஷ் ஜாமீன் கோரிய மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கில் ஆஜரான தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, எந்த தலையீடும் இல்லாமல் விசாரணை நடைபெறுவதாகவும், மாநில அரசே வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

நிபந்தனை ஜாமீன்
மேலும் புலன் விசாரணை நியாயமாக நடக்கிறது எனவும், விசாரணை அதிகாரி மாற்றப்பட்டு விழுப்புரம் சிபிசிஐடி ஆய்வாளர் வழக்கை விசாரிப்பதாகவும் குறிப்பிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கடலூர் திமுக எம்.பி. ரமேஷை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும் என்றும் அவரது மகன் மீதான கோரிக்கை மீது நவம்பர் 23ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.
-
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக












Click it and Unblock the Notifications