Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல் விக்கெட்! திமுக சின்னத்தில் வென்ற பாரிவேந்தர் பாஜக கூட்டணிக்கு தாவல்! அடுத்து அங்கே போட்டியாமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐஜேகே கட்சியின் நிறுவனரும் திமுக எம்பியுமான பாரிவேந்தர் அதிகாரப்பூர்வமாக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய போவதாக அறிவித்துள்ளார்.

திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட எம்பி பாரிவேந்தர் கடந்த சில நாட்களாக திமுகவை நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கி பேசி வருகிறார். அதோடு இவர் பாஜகவுடன் நெருக்கமும் காட்டி வருகிறார். தமிழ்நாட்டில் திமுக 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 38ல் வென்றது.

DMK MP IJK Paari Vendar announces he joined NDA alliance of BJP

இதில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட இந்திய ஜனநாயக கட்சி எம்பி பாரிவேந்தரும் கூட பாஜகவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இவர் என்னதான் ஐஜேகே கட்சியாக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் இவர் திமுக எம்பிதான். சமீபத்தில் இவர் பிரதமர் மோடியை நேரடியாக பாராட்டினார்.

இதையடுத்து நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜக தலைமையில் டெல்லியில் சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமையிலான கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாரி வேந்தருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாரிவேந்தரும் இதில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில்தான் இன்று அவர் அளித்த பேட்டியில், NDA கூட்டணியில்தான் இருக்கிறோம், இருக்கப்போகிறோம். இது உறுதியாகிவிட்டது. இந்திய ஜனநாயக கட்சியின் பார்வை தேசிய பார்வை. அதனால் தேசிய அளவிலான கூட்டணியில் இணைந்து உள்ளது. எந்த தொகுதி கேட்பது, எத்தனை தொகுதி கேட்பது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. இது தொடர்பாக கட்சியின் உயர்மட்டக்குழுவுடன் கலந்து பேசிய பிறகு முடிவு செய்வோம் என்று அறிவித்துள்ளார்.

இதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாரி வேந்தரின் ஐஜேகே இணைவது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில்தான் பாரி வேந்தர் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சியில் இருந்து போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கள்ளக்குறிச்சி தேர்தலில் பாரி வேந்தரை களமிறக்க பாஜக திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் பொன்முடி வீட்டில் நடந்த ரெய்ட்டிற்கும் இதற்கும் இடையில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. திமுக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் எம்பி கவுதம சிகாமணி ஆகியோர் அமலாக்கத்துறை ரெய்டுக்கு உட்படுத்தப்பட்டனர். கவுதம சிகாமணி கள்ளக்குறிச்சி தொகுதியிலிருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் பொன்முடி மற்றும் கவுதம சிகாமணி இருவரும் அமலாக்கத்துறை மூலம் விசாரிக்கப்பட்டார்.

கள்ளக்குறிச்சி தொகுதியில் ஐஜேகே பாரிவேந்தர் பாஜக கூட்டணி சார்பாக களமிறங்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில்தான் அதே தொகுதி எம்பி கவுதம சிகாமணி அமலாக்கத்துறை மூலம் குறி வைக்கப்பட்டு உள்ளார் என்று கூறப்படுகிறது.

என்ன சொன்னார்?: சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாரிவேந்தர், தமிழ்நாட்டில் இருந்து திமுக, அதிமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளை அகற்ற வேண்டும். திராவிட இயக்கங்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டு பரபரப்பை கிளப்பினார். அதாவது திராவிட இயக்கங்களை தமிழ்நாட்டில் இருந்தே அகற்ற வேண்டும்.

நான் ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருந்தேன். அப்போது 2.40 லட்சம் வாக்குகள் பெற்று வென்றேன். அதன்பின் வேறு கூட்டணிக்கு சென்றேன். நான் போகாத இடத்திற்கு சென்று இருக்க கூடாது. எம்பி பதவி என்பது சிறு அடையாளம்தான். என் அடையாளத்தின் சிறு துளிதான் அது. அதற்காக நான் போகாத இடத்திற்கு சென்று இருக்க கூடாது. நான் கூட்டணியில் இல்லாமல் தனித்து போட்டியிட்டால் வென்று இருப்பேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+