திமுக எம்.பி. கனிமொழி சோமுவுக்கு கொரோனா தொற்று உறுதி! வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை!
சென்னை: திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட கனிமொழி சோமு, தாமே மருத்துவர் என்பதால் உரிய மருந்துகளை உட்கொண்டு வருகிறார்.
இதனிடையே கடந்த இரண்டு நாட்களாக தன்னை சந்தித்தவர்களும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினர்
திமுக மருத்துவர் அணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி சோமுவுக்கு கடந்த 2 நாட்களாக காய்ச்சல் மற்றும் அதிக உடல் வலி இருந்திருக்கிறது. இதையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தாமே ஒரு மருத்துவர் என்பதால் கொரோனாவுக்கான மருந்துகளை முறைப்படி எடுத்துக்கொண்டு தன்னை தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார் கனிமொழி சோமு எம்.பி.

வேண்டுகோள்
இதனிடையே இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள அவர், கடந்த இரண்டு நாட்களாக தன்னை நேரில் சந்தித்தவர்கள் தயவு செய்து கொரோனா சோதனை செய்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா சோதனையில் அலட்சியம் வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அமைச்சர்கள்
அண்மையில் அமைச்சர்கள் முர்த்தி மற்றும் ராமச்சந்திரன் ஆகிய இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இப்போது திமுக எம்.பி. ஒருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கனிமொழி சோமு எம்.பி. சென்னையை சேர்ந்தவர் என்பது கூடுதல் தகவலாகும்.

பட்ஜெட் கூட்டத்தொடர்
கொரோனா காரணமாக கனிமொழி சோமு எம்.பி. வரும் 31-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் அதைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி நடைபெறும் பட்ஜெட் கூட்டத்திலும் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது.
-
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக்











Click it and Unblock the Notifications