நீங்க மட்டும்தான் நல்லவர்னா.. தேர்தல்ல போட்டியிடுறதுதானே.. அறப்போர் ஜெயராமனுக்கு திமுக எம்பி சுளீர்!
சென்னை: நீங்கள் மட்டும்தான் நேர்மையானவர் என எண்ணுகிறீர்கள் என்றால் நீங்களே இந்த தேர்தலில் போட்டியிட்டிருக்கலாமே என அறப்போர் இயக்கம் ஜெயராமனுக்கு திமுக எம்பி செந்தில் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், இன்றைய தினம் ஒரே கட்டமாக நடைபெற்றது.
இந்த தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், கோவை தெற்கு எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக நிர்வாகி குஷ்பு, நடிகர் விஜய், நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி உள்ளிட்டோர் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

நோட்டா இல்லை
இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதற்கான நோட்டா (NOTA- None of the above) பட்டன் இடம்பெறாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அது போல் வாக்களித்ததை சரிபார்க்க உதவும் விவிபாட் இயந்திரங்களும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.

மயிலாப்பூரில் வாக்கு
இந்த நிலையில் மயிலாப்பூரில் கற்பகவல்லி வித்யாலயா நடுநிலைப் பள்ளிக்கு நேற்றைய தினம் வாக்களிக்க வருகை தந்தார் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன். இவர் அங்கு நோட்டா இல்லாததால் தான் எப்படி வாக்களித்தேன் என்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் விவரித்துள்ளார்.

அறப்போர் இயக்கம் ஜெயராமன்
இதுகுறித்து ஜெயராமன் கூறுகையில் NOTA பட்டன் EVM இல் வைக்காமல் ரகசியமாக வாக்கு செலுத்தும் உரிமையையும் அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமையையும் மறுத்த மாநில தேர்தல் ஆணையத்தை கண்டிக்கும் வகையில் தேர்தல் விதி பிரிவு 71 படி நான் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை பதிவு செய்தேன் என குறிப்பிட்டுள்ளார். இதற்கு பல எதிர்ப்புகளும் ஆதரவுகளும் கமென்ட்டுகளாக வந்தன.

திமுக எம்பி செந்தில்குமார் பதில்
இந்த நிலையில் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வெங்கடேசனின் கருத்துக்கு தருமபுரி திமுக எம்பி செந்தில்குமார் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், நீங்கள் வசிக்கும் தெருவில்/வார்டில் உங்கள் வாக்கினை பெற தகுதியான ஒரு அரசியல் கட்சி/ சுயேச்சை வேட்பாளர் கூட இல்லையா?
Recommended Video

அறப்போர் இயக்கம் ஜெயராமன் பதிலடி
அல்லது நீங்கள் மட்டும் தான் நேர்மையானவர்/ நல்லவர் என்று எண்ணுகிறீர்களா. அப்படி என்றால் நீங்களே இந்த தேர்தலில் போட்டியிட்டிருக்கலாமே. இனி கட்சிகளை குறை கூற முடியாது என தெரிவித்துள்ளார். இதற்கு ஜெயராமனும் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில் EVM இல் NOTA என்பது ஒரு ஜனநாயக உரிமை. ஒரு MP யாக நீங்கள் தேர்தல் ஆணையத்தை கண்டித்து இதை பெற்று தந்திருந்தால் என் வார்டில் யார் நல்லவரோ அவருக்கு நான் வாக்கு செலுத்தி இருக்க முடியும். நீங்கள் செய்யாததால் ரகசியமாக NOTA செலுத்தும் உரிமையை இழந்த மக்களுக்கு நாங்கள் குரல் கொடுக்கிறோம் என பதிலடி கொடுத்துள்ளார்.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications