MLA சீட்டு கேட்கும் திமுக MP! அறிவாலயத்திற்கு ஊர்வலமாக அழைத்து வந்த நிர்வாகிகள்! நாமக்கல் பாலிடிக்ஸ்
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழக அரசியல் களம் சூடிபிடித்து வருகிறது. திமுக தரப்பில் அக்கட்சியினரிடம் விருப்ப மனு பெறப்பட்டு வரும் நிலையில், திமுகவினர் ஆர்வத்துடன் விருப்பமனு அளித்தி வருகின்றனர். இந்நிலையில், நாமக்கல் சட்டசபைத் தொகுதியில் திமுக வேட்பாளராக ராஜேஷ்குமார் எம்.பி. களமிறங்க வேண்டும் என 15க்கும் மேற்பட்டோர் விருப்பமனு அளித்திருப்பது கவனிக்கத்தக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைக்கட்டி விட்ட நிலையில், அரசியல் கட்சிகளில் வேட்பாளர்கள் தேர்வு படலம் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விருப்பமனு பெறும் நிகழ்வு ஒரு புறம் நடைபெற்றாலும் ஏற்கனவே தொகுதிக்கு 5 பேர் கொண்ட லிஸ்டை திமுக தலைமை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
நாமக்கல் சட்டசபைத் தொகுதியை பொறுத்தவரை தமிழ்நாட்டின் மிக முக்கிய தொகுதிகளில் ஒன்றாகும். அங்கு பால், லாரி, கோழிப்பண்ணை, முட்டை, ரிக் வண்டி, கல்வி நிலையங்கள், என ஏராளமான வளம் கொழிக்கும் தொழில் சாம்ரஜ்யங்கள் அமைந்துள்ளன.

இந்நிலையில் இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறங்க சிட்டிங் எம்.பி.யும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான ராஜேஷ்குமார் விருப்பமனு அளித்திருக்கிறார். இது குறித்த பிரத்யேக தகவல்களை இரண்டு மாதங்களுக்கு முன்பே ஒன் இந்தியா தமிழில் வெளியிட்டிருந்தோம். அதன்படியே அவர் எம்.பி. டூ எம்.எல்.ஏ. என்கிற வகையில் கட்சித் தலைமைக்கு தனது விருப்பத்தை நேற்றைய தினம் வெளிப்படுத்தியிருக்கிறார்.
மார்ச் 2ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு கொடுக்க வந்த ராஜேஷ்குமாரை அவரது நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்றிய, நகர, பேரூர், மற்றும் கிளைக்கழக நிர்வாகிகள் ஊர்வலமாக அழைத்துச் சென்று அறிவாலயத்தையே திணற வைத்துவிட்டார்கள்.
நீங்க தான் நாமக்கல்லில் நிற்கணும் என வலியுறுத்தி மொத்த நிர்வாகிகளும் ராஜேஷ்குமாருக்காக தனித்தனியாக விருப்பமனு கொடுத்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். இதற்கு மத்தியில் கடந்த வாரம் முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திச்செல்வனும் நாமக்கல் தொகுதிக்கு பணம் கட்டி விருப்பமனு அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்











Click it and Unblock the Notifications