சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

'தைரியம் இருந்தால் ஆட்சியைக் கலைத்துப் பார்..' தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் சவால்

Google Oneindia Tamil News

சென்னை: திமுக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ள யூ டியூபர் மாரிதாஸுக்கு, தைரியம் இருந்தால் ஆட்சியைக் கலைத்துப் பார் என்று திமுக எம்பி செந்தில்குமார் சவால் விடுத்துள்ளார்.

அம்பேத்கர், அண்ணா, கருணாநிதி தொடங்கிப் பல தலைவர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அவதூறு பரப்பி வருபவர் யூ டியூபர் கிஷோர் கே சாமி.

கொடூரம்.. மும்பை அடுக்குமாடி விபத்து.. ஒரே குடும்பத்தில் 8 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சோகம்! கொடூரம்.. மும்பை அடுக்குமாடி விபத்து.. ஒரே குடும்பத்தில் 8 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சோகம்!

கிஷோர் கே சாமி கடந்த ஆண்டே பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அருவருக்கதக்க வகையில் பேசியதற்காகக் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.

கிஷோர் கே சாமி சர்ச்சை

கிஷோர் கே சாமி சர்ச்சை

திமுக ஐடி காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிசந்திரன் கடந்த 10ஆம் தேதி அளித்த புகாரின் அடிப்படையில் நள்ளிரவில் போலீசார் கிஷோர் கே சாமியை கைது செய்தனர். அவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டனர். அதன்படி அவர் தற்போது செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

யூ டியூபர் மாரிதாஸ் கண்டனம்

யூ டியூபர் மாரிதாஸ் கண்டனம்

இந்நிலையில், யூ டியூபர் மாரிதாஸ் தனது ட்விட்டரில், "திமுக நிர்வாகிகள் பேசாத பேச்சா போடாத பதிவா! ஆட்சி நிர்வாகத்தை ஒழுங்கா செய்யத் திறமை இல்லை, கேட்கும் கேள்விகளுக்குப் பதில் இல்லை! ஆக வழக்கமான அடக்குமுறை அரசியலில் திமுக ஸ்டாலின் இறங்கியுள்ளார். சட்டத்தை பழிவாங்கும் அரசியலுக்கு வளைக்கும் இந்த ஆட்சியைக் கலைப்பது தான் சரி" என்று பதிவிட்டுள்ளார்.

திமுக எம்பி பதிலடி

திமுக எம்பி பதிலடி

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள திமுக தருமபுரி எம்பி செந்தில்குமார், "தைரியம் இருந்தா கை வைச்சு பாரு. நீங்க எல்லாம் யாரு. நீங்க சொல்லிட்டா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கலைத்துவிடுவார்களா செம காமெடி. நிறைய வேலை இருக்கு. அவங்க வரும்வரை நேரத்தை பயன் உள்ளதாக செலவழிக்கவும். பி கு: உள்ளே போகும் போது மறக்காம board எடுத்துட்டு போகவும்" என்று சவால் விடுத்து ட்வீட் செய்துள்ளார். திமுக தருமபுரி எம்பி செந்தில்குமாரின் ட்வீட்டை இப்போது பலரும் ரீட்வீட் செய்து வருகின்றனர்.

குரூரமான பதிவுகள்

குரூரமான பதிவுகள்

கிஷோர் கே சாமியை மாதவரத்தில் உள்ள நீதிபதி வீட்டில் நள்ளிரவில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதிகள் கிஷோர் கே சாமி குறித்து மிகக் கடுமையான கருத்துகளை முன் வைத்தனர். பெண்களைப் பற்றி குரூரமான, கேவலமான பதிவுகளை கிஷோர் கே சாமி பதிவிட்டுள்ளார் என்று குறிப்பிட்ட நீதிபதி, பெண்கள் குறித்த கிஷோர் கே சாமியின் பதிவுகள் அவரது வக்கிர புத்தியைக் காட்டுகிறது என்றார்.

English summary
In his latest DMK MP Senthil Kumar challenges Youtuber Maridhas. Earlier Youtuber Maridhas condemns Kishore K Samy's arrest and tweets that DMK rule needs to be dissolved.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X