எங்க “ஸ்லீப்பர் செல்” சிங்கம் அண்ணாமலை.. பாஜக கதையை முடிச்சுட்டாரு! திமுக எம்பி செந்தில்குமார் கலாய்
"தமிழக பாஜகவின் கொஞ்சம் மிச்சம் மீதி இருந்த கடையை/கதையை முடிச்சு விட வந்த எங்கள் #sleeper_cell சிங்கம் அண்ணாமலை வாழ்க.” என்று பதிவிட்டுள்ளார் செந்தில்குமார்.
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவின் ஸ்லீப்பர் செல் என்றும், பாஜகவின் கதையை அவர் முடித்துவிட்டார் என்றும் எம்பி செந்தில்குமார் விமர்சித்து இருக்கிறார். பாஜகவில் அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகல், அதிமுக கூட்டணிக்கு எதிர்ப்பு என அண்ணாமலை தொடர்பான சர்ச்சைகள் பெரிதாகி இருக்கும் நிலையில் அவர் இவ்வாறு கூறினார்.
தமிழ்நாடு பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே மோதல் போக்கு கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து வருகிறது. பாஜக ஐடி விங் மாநில தலைவராக இருந்த நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அதை தொடர்ந்து இரு கட்சிகள் இடையேயான மோதல் முற்றியது.
அதன் தொடர்ச்சியாக பாஜக ஐடி விங் மாநில செயலாளராக இருந்த திலீப் கண்ணன் அக்கட்சியில் இருந்து விலகி எடப்பாடியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அவரோடு சேர்த்து மேலும் பலர் பாஜகவிலிருந்து விலகி அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்தனர்.

அதிமுக பாஜக மோதல்
குறிப்பாக அண்ணாமலையை விமர்சித்துவிட்டு கட்சியிலிருந்து விலகியவர்களையே எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இணைத்தது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இரு தரப்பினரும் கருத்து மோதலில் ஈடுபட்டதுடன், இரு தலைவர்களின் உருவ படங்களும் எரிக்கப்பட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

பாஜக கூட்டம்
இந்த நிலையில்தான் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், பேசிய அண்ணாமலை, "பாஜக தமிழ்நாட்டில் தனியாக இருந்தால் மட்டுமே அதை வளர்க்க முடியும். எனக்கு உரிய சுதந்திரத்தை வழங்க வேண்டும். நான் கட்சியின் மாநில தலைவர் என்றுதான் சொல்கிறேன். நான் ஒன்றும் பாஜகவின் மேனேஜர் இல்லை.

அதிமுக கூட்டணி
பாஜகவை தனியாக வளர்த்து எடுக்க நான் பாடுபட்டு வருகிறேன். தமிழ்நாட்டில் பாஜகவை வெற்றிபெற வைப்பதற்கான திட்டங்களை நான் வைத்து உள்ளேன். 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தால், மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன். எனது வழியில் செயல்பட முடியாதபோது பதவியில் இருந்தே ராஜினாமா செய்கிறேன்." என்று தெரிவித்தார்.

கடனாளி கருத்து
அண்ணாமலையின் பாஜகவிற்கு உள்ளேயே புகைச்சலை கிளம்பியது. அதிமுகவின் அமைப்பு செயலாளர் ஆதிராஜா ராமும் அண்ணாமலையின் இந்த கருத்தை வரவேற்பதாக கூறினார். நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தேசிய தலைமையே கூட்டணி குறித்து முடிவு செய்யும். எனது நிலைபாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன். பணம் இல்லாமல் அரசியல் செய்ய வேண்டும். காவல்துறையில் பணிபுரிந்து சிறுக சிறுக சேர்த்த பணத்தை அரவக்குறிச்சி தேர்தலில் செலவழித்து தற்போது கடனாளியாகிவிட்டேன்." என்று தெரிவித்து இருந்தார்.

திமுக எம்பி செந்தில்குமார்
இந்த நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள தருமபுரி தொகுதி திமுக எம்பி செந்தில்குமார், "தமிழக பாஜகவின் கொஞ்சம் மிச்சம் மீதி இருந்த கடையை/கதையை முடிச்சு விட வந்த எங்கள் #sleeper_cell சிங்கம் அண்ணாமலை வாழ்க." என்று பதிவிட்டு இருக்கிறார். அவரது இந்த கருத்தை பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications