வக்பு வாரியத் தலைவர் பதவி: எல்லாமே கூட்டணிக்கு எனில்? திமுகவில் உள்ள முஸ்லிம் பிரமுகர்கள் ஆதங்கம்
சென்னை: தமிழக வக்பு வாரியத்தின் தலைவராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முன்னாள் எம்.பி.யான எம். அப்துல் ரஹ்மான் தேர்ந்தெடுக்கப்படக் கூடும் என தெரிகிறது. இம்முறையும் வக்பு வாரியத் தலைவர் பதவி கூட்டணி கட்சிக்கே ஒதுக்கப்படுவதால் திமுகவில் உள்ள முஸ்லீம் தலைவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
திமுகவின் வலிமையான வாக்கு வங்கிகளாக முஸ்லிம்கள் இருந்து வருகின்றனர். அதேநேரத்தில் திமுகவை தவிர வேறு அணியில் சேர முடியாத அளவுக்கு கூட்டணிக் கட்சிகளாகவும் முஸ்லிம் கட்சிகள் இருக்கின்றன.
இதனால் ஒவ்வொரு தேர்தலின் போதும் பொதுவான நியமனங்களின் போதும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கே திமுக தலைமை முக்கியத்துவம் கொடுக்கிறது. இது திமுகவில் நீண்டகாலமாக பாடுபட்டு வரும் முஸ்லிம்களை இயல்பாகவே புறக்கணிக்க வைக்கிறது. இதனால் வரும் அதிருப்தியை திமுக தலைமைக்கு சுட்டிக்காட்டும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

கடந்த லோக்சபா தேர்தலில் கூட்டணி கட்சியினரை கணக்கு காட்டி ஒரு முஸ்லிம்க்கு கூட வாய்ப்பு தராதது,, ராஜசாபாவில் ஒரு முஸ்லிம்க்கு கூட வாய்ப்பு தராதது போன்ற அதிருப்தியான நிலை, ஒருகாலத்தில் சட்டசபை தேர்தலில் திமுக மட்டும் பத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்திய நிலையில் , நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக 3 பேருக்கு மட்டும் வாய்ப்பு கொடுத்தது. இதனால் திமுகவில் உள்ள முஸ்லிம் பிரமுகர்கள் கடும் அதிருப்தி அடைந்திருக்கின்றனர்.
இந்த நிலையில் திமுக அரசு பல்வேறு வாரியத் தலைவர் பதவிகளை நியமித்து வருகிறது. யாரும் எதிர்பாராத வகையில் சிறுபான்மையினர் நல ஆணைய்த்தின் தலைவராக மூத்த காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் இதர வாரியங்களின் தலைவர்கள் பதவிகளைப் பெறுவதில் திமுக கூட்டணி கட்சிகள் படுதீவிரமாக உள்ளன.
தற்போது தமிழக வக்பு வாரியத் தலைவர் பதவியானது இந்த முறையாவது திமுகவில் உள்ள முஸ்லிம் தலைவர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழ் நாடு வக்பு வாரிய உறுப்பினர்களாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதன்மை துணைத் தலைவர எம்..அப்துல் ரஹ்மான் முன்னாள் எம்.பி, முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் சமத் மகள பாத்திமா முசப்பர் , அதிமுக சார்பில் தமிழ்மகன் உசேன், சன்னி உலாமாக்கள் மற்றும் ஷ்யா உலாமாக்கள் பிரிவில் இருந்து தலா ஒருவர் என மொத்தம் 5 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் அப்துல் ரஹ்மான் வக்பு வாரியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படக் கூடும் என தெரிகிறது.
1989-ம் ஆண்டு திமுக ஆட்சியை பிடித்த போது முஸ்லிம் லீக் தலைவரான அப்து லத்தீப்-க்கு வக்பு வாரியத் தலைவர் பதவியை அப்போதைய முதல்வர் கருணாநிதி கொடுத்தார். ஆனால் 1991-ல் ஆட்சிக்கு வந்த அதிமுக, அக்கட்சியின் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வாக இருந்த முன்னாள் அமைச்சர் முகமது ஆசிப்புக்கு அந்த பதவியை கொடுத்தது.
1996-ல் திமுக ஆட்சிக்கு வந்த போது மீண்டும் திமுகவின் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் லத்தீப்புக்கே அந்த பதவி கொடுக்கப்பட்டது. சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் திமுக மூத்த முன்னோடி இசைமுரசு என போற்றப்பட்ட பாடகர் நாகூர் ஹனிபாவுக்கு வக்பு வாரியத் தலைவர் பதவி தரப்பட்டது. 2006-ல் திமுக ஆட்சி அமைந்த போதும் தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஹைதர் அலிக்கும் பின்னர் கவிக்கோ அப்துரல் ரகுமானுக்கும் வக்பு வாரியத் தலைவர் பதவி வாரி வழங்கப்பட்டது.
இப்படி எப்ப பார்த்தாலும் கூட்டணி கட்சியினருக்கே வக்பு வாரியத் தலைவர் கொடுக்கப்படுகிறது. தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த அணுகுமுறையை மாற்றி இருந்தால் சற்றே ஆறுதலை தந்திருக்கும் என்கின்றனர். இந்நிலை தொடர்ந்தால் திமுகவில் புதிதாக முஸ்லிம்கள் வர மாட்டார்கள் இ யூ முஸ்லிம் லீக்,, தமுமுக, எஸ்.டி.பி.ஐ. போன்ற கட்சிகளில்தான் இணைவார்கள. இதனால் கூட்டணி கட்சிகள் தான் பலப்படும். ஆகவே திமுகவில் நீண்ட காலமாக உள்ள முஸ்லிம் பிரமுகர்களுக்கும் வாரியத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளில் உரிய பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்கின்றனர்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications