"சில்லித்தனமான வேலையை திமுக செய்யாது".. ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மூர்த்தி மறுப்பு!
மதுரை: மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு திமுக எந்த இடையூறும் செய்யவில்லை, அப்படி ஒரு சில்லித்தனமான வேலைகளை திமுக எந்தக் காலத்திலும் செய்யாது என அமைச்சர் மூர்த்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தவெகவின் 2வது மாநில மாநாடு நேற்று மதுரையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், நடைபெற்ற இந்த மாநாடு அரசியல் ரீதியாகக் கவனம் பெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், திமுக, பாஜக, அதிமுக ஆகிய கட்சிகளை விமர்சித்தார்.

இந்த மாநாட்டில் பேசிய தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, திமுக மீது கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தார். அண்ணா பாதையிலிருந்து திமுக விலகிவிட்டதாகச் சாடிய ஆதவ் அர்ஜுனா, திமுக ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாகச் சாடினார். மேலும், தவெகவின் மதுரை மாநாட்டிற்குப் பெரிய தடைகளை அமைச்சர் மூர்த்தி செய்ததாகவும் தவெக கூட்டத்தைத் தடுக்க பார்த்ததாகவும் ஆதவ் அர்ஜுனா பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.
ஆதவ் அர்ஜுனா பேசுகையில், "அமைச்சர் மூர்த்தி, இந்த மதுரை மாநாட்டிற்கு எத்தனை தடைகள் உருவாக்கினார் தெரியுமா? மூர்த்தி என்ன சமூக நீதி காவலரா? ஒட்டுமொத்த ஊழலையும் ஒரு குடும்பத்திற்கு கொடுக்கும் அரசியல்வாதி தான் அவர். அத்தனை தடைகளையும் உடைத்து இங்கு நின்று கொண்டிருக்கிறோம். இந்தத் தடைகளை மீறி மாநாடு வெற்றிகரமாக நடைபெறுவதற்கு தொண்டர்களின் ஆதரவே காரணம்" என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி, ஆதவ் அர்ஜூனாவின் கருத்துகளுக்கு பதிலளித்தார். அமைச்சர் மூர்த்தி பேசுகையில், "இப்படிப்பட்ட சில்லித்தனமான வேலைகளை திமுக செய்யாது" என்று தெரிவித்தார்.
"தவெக மாநாட்டிற்கு தாங்கள் ஒரு துளி கூட இடையூறு செய்யவில்லை. எந்த ஒரு திமுக தொண்டனும் அதுபோன்ற சில்லித்தனமான வேலைகளில் ஈடுபடுவது இல்லை. ஆதவ் அர்ஜுன் வேண்டுமென்றே இது போன்ற அவதூறுகளை எங்கள் மீது பரப்பி உள்ளார். நேற்று நடைபெற்ற தவெக மாநாட்டிற்கு மாவட்ட நிர்வாகத்தில் இருந்தும் எங்களுடைய பகுதியில் இருந்தும் எந்த ஒரு இடையூறும் செய்யவில்லை.
எதிரிக்கு கூட நாங்களோ அல்லது எங்கள் முதலமைச்சரோ அந்த மாதிரி வேலைகளை நாங்கள் எந்த காலத்திலும் பார்ப்பதில்லை. அவர் செய்திருக்கிறார் என்றால் அதைவிட ஒரு பங்கு மேலாகத்தான் நாங்கள் செய்ய நினைப்போம். சேர் கொடுக்கக்கூடாது போன்றவற்றை திராவிட முன்னேற்ற கழகத்தில் இருக்கக்கூடிய ஒரு தொண்டன் கூட அதனை செய்ய மாட்டான்" எனத் தெரிவித்தார்.
-
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
TASMAC: பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் ஏன்? யார் யாருக்கு லஞ்சம் போகிறது தெரியுமா? முழு லிஸ்டடால் ஷாக் -
பரிசு வேண்டாம்.. நோட்டு கொடுங்க.. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இறங்கிய தவெக அமைச்சர் -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
'பவர்’ தந்த மக்களுக்கு ’பவர்கட்’ பரிசு.. என்ன துறை என்றே தெரியாத அமைச்சர்கள்! விட்டு விளாசிய தமிழிசை -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
ஓடியாங்க, ஓடியாங்க.. தமிழ்நாட்டில் முதலீடு.. விஜய் போட்ட உத்தரவு.. அமைச்சர் கீர்த்தனா-வின் 4 முக்கிய வாக்குறுதி! -
தமிழகத்திற்கு நிரந்தர டிஜிபி.. யுபிஎஸ்சி பரிந்துரைக்கு ராமதாஸ் வரவேற்பு.. விஜய்க்கு வைத்த கோரிக்கை











Click it and Unblock the Notifications