திமுகவில் ஒரு ஷிண்டே என்பதா.. அண்ணாமலை பேச்சை யாருமே பொருட்படுத்துவதில்லை! ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்
சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பப்ளிசிட்டிக்காக பேசக்கூடியவர் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
Recommended Video
அண்ணாமலை பேசுவதை எல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் திமுகவில் ஒரு ஏக்நாத் ஷிண்டே உருவாவார் என அண்ணாமலை நேற்று பேசியிருந்த நிலையில் தனது பதிலடியை கொடுத்திருக்கிறார் ஆர்.எஸ்.பாரதி.

அண்ணாமலை பேச்சு
தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றத் தவறியதாக கூறி பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அண்ணாமலை, மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தனது மகனுக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைச்சரவைக்குள் கொண்டு வந்ததால் தான் அங்கே பிளவு ஏற்பட்டு ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக வந்துள்ளார் எனக் கூறினார். இது போன்ற ஒரு நிலை தமிழகத்திலும் வரக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.

அமைச்சர் பதவி
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாவதாகவும் அவ்வாறு அமைச்சரவைக்குள் உதயநிதியை கொண்டு வந்தால் தமிழகத்திலும் ஒரு ஏக்நாத் ஷிண்டே புறப்படுவார் என அண்ணாமலை கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியுள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அண்ணாமலை பப்ளிசிட்டிக்காக பேசக்கூடியவர் என விமர்சித்துள்ளார்.

பொருட்படுத்த வேண்டாம்
மேலும் திமுகவில் குழப்பம் ஏற்படுத்த முயலும் அண்ணாமலையின் முயற்சி ஒரு போதும் பலிக்காது என்றும் திமுக ஒரு கட்டுக்கோப்பான இயக்கம் எனவும் ஆர்.எஸ்.பாரதி கூறியிருக்கிறார். சிவசேனாவையும் திமுகவையும் ஒப்பிடத் தேவையில்லை என்றும் அண்ணாமலையின் பேச்சை தாம் உட்பட திமுகவினர் யாரும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை எனவும் கூறியிருக்கிறார்.

பதிலுக்கு பதில்
கடந்த சில நாட்களாக அதிமுக லைம் லைட்டில் இருந்த நிலையில் மீண்டும் திமுக பாஜக இடையேயான வார்த்தைப் போர் லைம் லைட்டுக்கு வந்திருக்கிறது. ஆ.ராசா பேச்சும் அதற்கு நயினார் நாகேந்திரன் அளித்த பதிலும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதேபோல் மஹாராஷ்டிரா மாநில அரசியலை தமிழக அரசியலோடு அண்ணாமலை பொருத்திப் பேசியிருப்பதும் விவாதத்திற்கு உரிய தலைப்பாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications