திமுகவில் பூகம்பம்.. ஸ்டாலின் மனக்குழப்பத்தில் உள்ளார்.. அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பேட்டி!
திமுகவில் பூகம்பம் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் மனக்குழப்பத்தில் உள்ளார், என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தற்போது பேட்டி அளித்துள்ளார்.
சென்னை: திமுகவில் பூகம்பம் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் மனக்குழப்பத்தில் உள்ளார், என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தற்போது பேட்டி அளித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் மிசாவில் கைதானது தொடர்பான செய்தி தொடர்ந்து வைரலாகி வருகிறது. இந்தியாவில் மிசா சட்டம் அமலில் இருந்த காலத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி உத்தரவின் பெயரில் பலர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக தமிழக அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தற்போது பேட்டி அளித்துள்ளார்.
அதில், மிசாவின் போதுதான் ஸ்டாலின் கைதானார். ஆனால் அவர் ஏன் கைதானார் என்று தெரியவில்லை. அவரை மிசா சட்டத்தின் கீழ் யாரும் கைது செய்யவில்லை.

இரண்டு ஆணையம்
மொத்தம் இரண்டு விசாரணை ஆணையம் மிசா கைதிகள் பெயரை கொண்டு இருக்கிறது. ஆனால் இரண்டிலும் ஸ்டாலின் பெயர் இல்லை. இதன் மூலம் அவர் மிசாவிற்காக கைதாகவில்லை என்பது தெரிகிறது. அதனால் அந்த நேரத்தில் அவர் எதற்காக கைதானார் என்று அவர்தான் கூற வேண்டும்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்திதான் வேலூரில் வென்றோம் என்று திமுக சொன்னது. அப்படியென்றால் எதனால் அவர்கள் 2 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தனர். இதற்கும் உதயநிதிதான் காரணம் என்று அவர்கள் சொல்வார்களா?

திமுக பூகம்பம்
திமுகவில் பூகம்பம் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் மனக்குழப்பத்தில் உள்ளார். அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. உதயநிதி ஸ்டாலின் மூலம் அவரின் கட்சிக்குள் பிரச்சனை வரப்போகிறது.

உள்ளாட்சி தேர்தல்
நெஞ்சை நிமிர்த்தி நேர்கொண்ட பார்வையாக உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயார். அதிமுக கட்சியில் எல்லோரும் உற்சாகமாக இருக்கிறார்கள். உள்ளாட்சி தேர்தலிலும் நாங்கள்தான் வெற்றிபெறுவோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
-
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications