நீலகிரி போல வேறு எங்கும் நடக்க கூடாது.. டிரோன்கள் பறக்க கூடாது.. தேர்தல் ஆணையத்தை நாடிய திமுக!
சென்னை : வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் சில அறைகளில் சிசிடிவி செயல்படாதது தொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் மனு அளித்துள்ளது. மேலும், ட்ரோன்கள் பறக்கக் கூடாது என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ இன்று மனு அளித்தார்.
நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஸ்ட்ராங் ரூமில் கடந்த 27ஆம் தேதியன்று இரவில் சிசிடிவி கேமராக்கள் சுமார் 20 நிமிடங்கள் செயலிழந்தன. மின் இணைப்பு பழுது காரணமாக சிசிடிவி கேமரா செயலிழந்திருக்கக்கூடும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ இன்று புகார் அளித்தார்.
பின்னர் திமுக எம்.பியும், வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நீலகிரி பாராளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து பதிவான வாக்குகளை வைத்துள்ள ஸ்ட்ராங் ரூமில் உள்ள சிசிடிவி கேமிராக்கள் கடந்த 27ஆம் தேதி அன்று 20 நிமிடங்களுக்கு இயங்காமல் போனது. தொடர்ந்து சிசிடிவி கேமராக்கள் இயங்கியதால் மின் இணைப்புகளில் பழுது ஏற்பட்டு இயங்கவில்லை என்று நீலகிரி தேர்தல் அதிகாரி கூறி இருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள எந்த ஸ்ட்ராங் ரூமிலும் இதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக திமுக சார்பில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆணைக்கு இணங்க கோரிக்கை மனுவை தேர்தல் ஆணையத்தில் கொடுத்து உள்ளோம். தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஸ்ட்ராங் ரூம்களிலும், சிசிடிவி கேமராக்கள் எந்த பழுதும் இல்லாமல் முழுமையாக இயங்க வேண்டும்.
வாக்கு எண்ணிக்கைக்காக ஸ்ட்ராங் ரூம்கள் திறக்கப்படும் வரை சிசிடிவிக்கள் முழுமையாக இயங்க வேண்டும். சிசிடிவி வீடியோ காட்சிகளை தேவைப்படும் போதெல்லாம் வேட்பாளர்களோ, வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் கேட்கும்போது தர வேண்டும் என மனு கொடுத்து உள்ளோம்.
ஸ்ட்ராங் ரூமை சுற்றி உள்ள இடங்களில் 500 மீட்டர் சுற்றவளவுக்கு எந்த ட்ரோன் போன்ற கருவிகளும் பறக்கக் கூடாது என்றும் தேர்தல் ஆணையத்திடம் கேட்டு உள்ளோம். ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ள்ள மண்டலம் குறித்த உரிய அறிவிப்பை காவல்துறைக்கு அனுப்புவதாக மாநில தேர்தல் அதிகாரி கூறி உள்ளார். சிசிடிவி கேமராக்களை பழுது அடையாமல் பார்த்துக் கொள்வோம் என்ற உறுதியை கொடுத்து உள்ளார்.
எலெக்ட்ரிக்கல் ஷாட் சர்க்க்யூட் காரணமாக இது நடந்து உள்ளதாக கூறி உள்ளனர். எல்லா வேட்பாளர்களின் ஏஜெண்ட்களையும் அழைத்துச் சென்று காட்டி உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் சொல்லப்பட்டு உள்ளது.
எங்கள் வேட்பாளரின் ஏஜெண்டுகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, ஸ்ட்ராங் ரூமில் உள்ள சீல்கள் சரியாக இருந்தது, அந்த இடத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. இந்த நிகழ்வில் தேர்தல் அதிகாரி சொல்லி உள்ள விளக்கம் எங்களுக்கு சரியானதாக படுகிறது” எனத் தெரிவித்துள்ளார் என்.ஆர்.இளங்கோ.
-
திரிசங்கு சொர்க்கத்தில் சி.விஜயபாஸ்கர்! கடைசி நேரத்தில் காலைவாரிய திமுக! போக்கு காட்டும் பனையூர்? -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்!












Click it and Unblock the Notifications