அந்த 34 பேரை டிஸ்மிஸ் செய்ய டெல்லிக்கு கடிதம் எழுதுவீங்களா? திமுக போஸ்டரில் ஆளுநருக்கு கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை முதலில் இருந்து நீக்க உத்தரவிட்ட ஆளுநர் ரவி, 34 மத்திய அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லிக்கு கடிதம் எழுதுவீர்களா என திமுகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைசச்ராக இருந்த செந்தில் பாலாஜி, அந்த துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.

DMK poster asks Tamilnadu governor to dismiss 34 central ministers who have criminal cases

இதில் கடந்த 13 ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு இதயத்தில் 4 இடங்களில் அடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவருக்கு கடந்த 21 ஆம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் உடல்நிலை தேறி வருவதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநர் ரவி முதல்வருக்கு அறிவுறுத்தினார்.
ஆனால் முதல்வர் தனக்குள்ள தனி அதிகாரத்தை பயன்படுத்தி இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியை நீட்டிக்க வைக்கும் வகையில் அரசாணை வெளியிட்டார். இந்த நிலையில் டெல்லி சென்றிருந்த ஆளுநர் ரவி, மத்திய அரசின் சட்ட ஆலோசகர்களை சந்தித்து ஆலோசித்தார். இதையடுத்து செந்தில் பாலாஜியை தமிழக அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்வதாக உத்தரவிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் சட்டரீதியாக சந்திக்க தயார் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஆளுநரின் செயலுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அது போல் திமுக கூட்டணி கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னையில் பல்வேறு இடங்களில் திமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

அந்த போஸ்டரில் கிண்டிக்கு ஒரு கேள்வி என தலைப்பில் ஒட்டப்பட்ட போஸ்டரில் கொலை, கொள்ளை, சமூகநல்லிணக்கத்தை சீர்குலைத்தல் உள்ளிட்ட கடும் குற்ற வழக்குகளை சந்தித்து வரும் மத்திய பாஜக அரசின் உள்ள 77 அமைச்சர்களில் 34 அமைச்சர்கள் மீது வழக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் முரளிதரன் மீது 7 வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. சிறுபான்மையினர் அமைச்சர் ஜான் பார்லா மது 9 வழக்குகளும் உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீநிசித் பிரமானிக் மீது 11 வழக்குகளும் இருப்பதாக அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை எல்லாம் பதவியிலிருந்து விலக்கச் சொல்லி டெல்லிக்கு கடிதம் எழுதுவீங்களா கிண்டி..? என அந்த போஸ்டர் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+