சுபஸ்ரீ பெற்றோருக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்...
Recommended Video
சென்னை: பேனர் விழுந்து உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.
சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவுக்காக வைக்கப்பட்ட பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் கடந்த வாரம் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் விளைவாக அரசியல் கட்சித் தலைவர்கள் தாங்களாக முன்வந்து கட்சி நிகழ்ச்சிகளில் பேனர் வைக்கவேண்டாம் என அறிக்கை வெளியிட்டனர்.

பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், லாரி ஓட்டுநர், பேனர் அடித்தவர், என அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சுபஸ்ரீ இழந்து வாடும் அவரது பெற்றோரை அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவருகின்றனர்.

முதல் ஆளாக சுபஸ்ரீ வீட்டுக்கு ஓடோடி சென்ற மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், அவரது பெற்றோருக்கு தனது வருத்தத்தை தெரிவித்துக்கொண்டதோடு ஆறுதலையும் கூறிச்சென்றார். இதையடுத்து திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்று துக்கம் விசாரித்தார். மேலும், பேனர் கலாச்சாரத்தை திமுக இனி எப்போதும் பின்பற்றாது எனவும் கூறினார்.

இந்நிலையில், இன்று காலை சுபஸ்ரீ வீட்டுக்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுபஸ்ரீ பெற்றோரிடம் ஆறுதல் தெரிவித்தார். மனம் உடைந்த நிலையில் இருந்த சுபஸ்ரீயின் தந்தைக்கு தைரியம் ஊட்டினார். மு.க.ஸ்டாலினிடம் பேசும் போது சுபஸ்ரீ தந்தையின் குரல் தழுதழுத்தது. ஸ்டாலினுடன் டி.ஆர்.பாலு எம்.பி., தாமோ அன்பரசன் உள்ளிட்டோரும் சுபஸ்ரீ வீட்டுக்கு சென்றனர்.
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications