Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

DMK Manifesto: மகளிர் உரிமைத் தொகை ரூ 2000 உயர்வு! 8ஆவது ஊதியக் குழு அமல்! ஸ்டாலின் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகளிர் உரிமைத் தொகை ரூ 2 ஆயிரமாக உயர்த்தப்படும் என திமுக சார்பில் தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். மேலும் 8ஆவது ஊதியக் குழுவும் அமல்படுத்தப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் 164 இடங்களில் திமுக போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்களை நேற்றைய தினம் அறிவித்திருந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் திமுகவின் கதாநாயகன் என அழைக்கப்படும் தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்படும் என அறிவித்திருந்தார்.

DMK Manifesto

அந்த வகையில் இன்றைய தினம் மாலை 6.30 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியிருப்பதாவது:15 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் 8ஆம் வகுப்பு வரை விரிவுப்படுத்தப்படும். ஒரு கோடியே 31 லட்சம் சகோதரிகள் மாதந்தோறும் ரூ 1000 உரிமைத் தொகையாக பெறுகிறார்கள். இனி நமது ஆட்சிக் காலத்தில் ரூ 2000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

இலவச மின்சாரம் பெறும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு எவ்வித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சார பம்பு செட்டுகள் வழங்கப்படும். பல்வேறு திட்டங்களின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.

முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படுவதற்கான ஆண்டு வருமான வரம்பு ரூ 5 லட்சமாகவும் காப்பீட்டுத் தொகை ரூ 10 லட்சமாகவும் உயர்த்தப்படும். கல்லூரி மாணவ, மாணவியரின் உயர் கல்விச் சேர்க்கையை அதிகரிக்க புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்படி மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஆயிரம் ரூபாய் இனி ரூ 1500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ 3500 ஆகவும் கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ 4500 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தப்படும்.

முதியோர் உதவித் தொகை ரூ 1200-லிருந்து ரூ 2000 ஆகவும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை 1500 ரூபாயிலிருந்து ரூ 2500 ஆகவும் உயர்த்தப்படும். மீன்பிடி தடைக்கால சிறப்பு நிவாரணத் தொகை 8 ஆயிரம் ரூபாயில் இருந்து 12 ஆயிரம் ரூபாயாகவும் மீன்பிடி குறைவு கால சிறப்பு நிவாரணத் தொகை ரூ 6 ஆயிரத்திலிருந்து 9 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

அன்னை தமிழைப் போற்ற பன்னாட்டுத் தமிழ் அறிஞர்களையும் மொழி வல்லுநர்களையும் கொண்டு சென்னையில் செம்மொழி மாநாடு நடத்தப்படும். ஒன்றிய மாநில உறவுகள் குறித்து ஆராய தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையிலான அறிக்கையை நாடு முழுவதும் விவாதப் பொருளாக்கி மாநில அரசுகளின் உரிமைகளை நிலைநாட்டும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.

சுயஉதவிக் குழு உறுப்பினராக இருக்கும் பெண்கள், தொழில் முனைவோராக முன்னேறிடும் வகையில் பிணை எதுவுமின்றி ரூ 5 லட்சம் வரை மானியத்துடன் வங்கி கடனுதவி வழங்கப்படும். பேரிடர் கால இழப்பீடுகள் ஹெக்டேர் ஒன்றுக்கு : இறவைப் பாசன பயிர்கள் மற்றும் நெல் பயிர்கள் ரூ 25 ஆயிரம், நீண்டகால பயிர்கள் ரூ 27 ஆயிரம் , மானாவாரிப் பயிர்கள் ரூ 12 ஆயிரம் என உயர்த்தி வழங்கப்படும்.

மாவட்டங்கள் முதல் வட்டங்கள் வரையிலான அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சைக்கான கருவிகள் இரு மடங்காக்கப்படும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்காக அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும்.

எட்டாவது ஊதியக் குழு அறிக்கையை மத்திய அரசு செயல்படுத்தியதும் அதனை மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் செயல்படுத்த குழு அமைக்கப்படும். அரசு அமைப்புகளில் ஏற்படும் 1.5 லட்சம் காலிப் பணியிடங்கள் காலதாமதமின்றி நிரப்பப்படும். அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகள் உரிய நேரத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+