நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்.. 5ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது திமுக
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் 5ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

மொத்தம் 12838 வார்டு உறுப்பினர் பதவிகளை நிரப்ப வரும் பிப்ரவரி 19இல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதைத் தொடர்ந்து வரும் மார்ச் 4இல் மேயர், நகர்மன்ற தலைவர்களைத் தேர்வு செய்ய மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது.
இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் என பலமுனை போட்டி நிலவுகிறது. வேட்புமனு தாக்கல் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திமுக கூட்டணியில் இன்னும் கூட இடப்பங்கீடு இன்னும் முழுமையாக முடியவில்லை.
இந்தச் சூழலில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான 5வது கட்ட வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது. பூவிருந்தவல்லி, திருவேற்காடு, திருநின்றவூர், திருமிழிசை, கள்ளக்குறிச்சி நகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
புதன்கிழமை அனைத்துப் பகுதிகளிலும் திமுக தரப்பில் இடப்பங்கீடு சுமூகமாக முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications