இபிஎஸ் - ஓபிஎஸ் வாய்ப்பில்லை ராஜா.. திமுகவின் பி டீம்.. நெருங்க விடாத ஜெயக்குமார்
எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர் செல்வமும் நேருக்கு நேராக சந்திக்க வாய்ப்பு இல்லை என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் சந்திக்க வாய்ப்பே இல்லை என இபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னத்தை முடக்க முயற்சி செய்து முடியாத நிலையில் பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைந்தது. அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தென்னரசு போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் அதிமுகவிற்கு பாஜக ஆதரவு தருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்போம் என்றும் என்றும் கூறியுள்ளனர். இதனிடையே ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், அதிமுகவின் இரட்டை இலை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக விட்டுக்கொடுப்பதாக கூறினார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய கு.ப.கிருஷ்ணன், ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலைக்காக வாக்கு சேகரிப்போம் என்று கூறினார். ஓ.பன்னீர் செல்வத்தை பாராட்டிய செங்கோட்டையனுக்கு நன்றி என்று கூறினார்.

இதனிடையே ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் சந்திப்பார்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று கூறினார். இதனிடையே இன்று தேர்தல் அதிகாரியை சந்தித்த ஜெயக்குமார், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக தேர்தல் நடத்தை விதிகளை மீறி வருவதாக புகார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமாரிடம், ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு நிகழுமா என்று கேட்டனர். அதற்கு வாய்ப்பே இல்லை என்று ஜெயக்குமார் கூறினார். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறக்கூடாது. அதிமுகவின் பி டீம் போல ஓ.பன்னீர் செல்வம் செயல்படுவதாக மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications