விஜய் பற்றி.. ஒரு வார்த்தை சொல்லாத உதயநிதி.. செமயான ஸ்கெட்ச்.. இதை தவெக எதிர்பார்க்கலையே!
சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் இந்த முறையும் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் ஹிட் அடித்துள்ளது. அதே சமயம் அவர் தனது பிரச்சாரத்தில் மிக கவனமாக விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் பற்றி பேசுவதை தவிர்த்து வருகிறார்.
தமிழகம் முழுக்க 2026 சட்டமன்றத் தேர்தல் காய்ச்சல் உச்சத்தில் இருக்கிறது. ஒரு பக்கம் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்திற்காக பிரச்சார திட்டங்களை வகுத்து வருகிறார். இதுவரை பெரிதாக பிரச்சாரம் செய்யாதவர்.. இன்று முதல் தென் மாவட்டங்களுக்கு செல்கிறார். மறுபக்கம் தி.மு.க-வின்' உதயநிதி ஸ்டாலின் தனது பிரசார வேனைத் துடைத்துப் போட்டுவிட்டுப் புயலாகக் கிளம்பியிருக்கிறார். அவரின் பிரச்சாரம் இந்த முறையும் ஹிட். ஆனால், இந்த முறை உதயநிதியின் பிரசார பாணியில் ஒரு 'சைலண்ட்' மாற்றம் தெரிகிறது. அது - TVK சைலன்ட்!

'விஜய் யார்?' - மைண்ட் கேம் ஆடும் உதயநிதி!
பிரசார மேடைகளில் உதயநிதியின் மைக், எடப்பாடி பழனிசாமியை நோக்கித்தான் எந்நேரமும் நெருப்பைக் கக்குகிறது. "அடிமை", "பாதம் தாங்கி", "பஞ்சர் டயர்" என எடப்பாடியை ஏகவசனத்தில் வறுத்து எடுக்கும் உதயநிதி, அதே மேடையில் துளிகூட விஜய்யைப் பற்றியோ, தமிழக வெற்றிக் கழகத்தை பற்றியோ வாய் திறப்பதில்லை. இது தற்செயலானது அல்ல; பக்கா ஸ்கெட்ச்!
உதயநிதியின் இந்த 'மௌன' உத்தியின் பின்னணியில் இருக்கும் மூன்று காரணங்கள் இவைதான்:
முக்கிய எதிரி AIADMK-தான்: விஜய்யை ஒரு முக்கிய அரசியல் சக்தியாக அங்கீகரித்து அவருக்கு பதில் அளித்தால், அது அவருக்குத் தேவையற்ற முக்கியத்துவத்தைக் கொடுத்துவிடும் என நினைக்கிறார் உதயநிதி. "எங்களுக்குப் போட்டியே அ.தி.மு.க-தான்" என்கிற பிம்பத்தை நிலைநிறுத்துவதன் மூலம், தேர்தல் களத்தை இப்போதும் தி.மு.க Vs அ.தி.மு.க என்றே வைத்திருக்க விரும்புகிறார்.
வாக்குச் சிதறல் பயம்: ஒருவேளை விஜய்யைத் தாக்கினால், அது நடுநிலை வாக்காளர்களையும், இளைய தலைமுறை ரசிகர்களையும் தி.மு.க-வுக்கு எதிராகத் திருப்பிவிடும் அபாயம் உண்டு. அல்லது விஜய்க்கு லைம் லைட் கொடுக்கும். அதனால்தான், "அவர் பாட்டுக்கு வரட்டும், நாம் நம் வேலையைப் பார்ப்போம்" என்கிற ரீதியில் எடப்பாடியை மட்டும் டார்கெட் செய்கிறார்.
திரைத்துறையில் நெருக்கமாக இருந்ததால் வந்த தயக்கமா அல்லது எதிர்காலக் கூட்டணியை மனதில் வைத்து ஆடும் காய்நகர்த்தலா? என அறிவாலயத்தின் உள்வட்டாரத்திலேயே கிசுகிசுக்கிறார்கள். விஜயை எல்லாம் மதிக்க வேண்டாம் என்றே இப்படி உதயநிதி செய்வதாக கூறப்படுகிறது.
எடப்பாடி Vs உதயநிதி: தொடரும் மல்லுக்கட்டு!
"எடப்பாடி பழனிசாமி நிரந்தரமாக அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக இருக்க வேண்டும், அப்போதுதான் தி.மு.க எப்போதும் ஜெயிக்க முடியும்" என தஞ்சை பிரசாரத்தில் உதயநிதி அடித்த கமெண்ட், அ.தி.மு.க வட்டாரத்தை ரத்தக் கொதிப்புக்கு ஆளாக்கியிருக்கிறது. "தமிழகத்துக்கும் டெல்லிக்கும் இடையிலான போர்" என உதயநிதி வர்ணிக்கும்போது, எடப்பாடியைத் 'டெல்லி ஏஜென்ட்' என முத்திரை குத்துவதுதான் அவரது பிரதான குறிக்கோளாக இருக்கிறது.
விஜய் தரப்போ, "இது தூய சக்திக்கும் (TVK) தீய சக்திக்கும் (DMK) நடக்கும் போர்" என நேரடியாக மோதலுக்கு அழைக்கிறது. ஆனால், உதயநிதியோ அந்தப் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்காமல், "எடப்பாடி சார்... டயரைத் தொட்டு கும்பிட்டீங்களே..." என பழைய கதையைப் பேசி அ.தி.மு.க-வை மட்டும் ரவுண்டு கட்டி அடிக்கிறார்... இதனால் விஜய் என்னையும் கண்டுகொள்ளுங்கள் என்று ஏக்கமாக ஒதுங்கி நிற்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது!
-
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
கமல் கோரிக்கையை நிராகரித்த விஜய்.. மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன? -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
நள்ளிரவு சர்ப்ரைஸ் ரெய்டு விட்ட அமைச்சர்.. கோவை அரசு மருத்துவமனையில் ட்விஸ்ட் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை.. ஜூலையில் கூடும் சட்டசபை? பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் வரும்? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications