திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழுத் தலைவர் ஒருமனதாக மு.க.ஸ்டாலின் தேர்வு
சென்னை: அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழுத் தலைவர் ஒருமனதாக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.
Recommended Video
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றிப் பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அதிமுக கூட்டணி 75 இடங்களிலும் வென்றுள்ளது..
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் அடுத்த முதல்வராக வருகிற 7ம் தேதி பொறுப்பேற்க உள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக அதிகாரத்தில் இல்லாத திமுக, இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.

உதவிய கூட்டணி
மொத்தமாக 125 இடங்களில் திமுக வெல்ல, கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்18 தொகுதியிலும்,விசிக 4 தொகுதிகளிலும், மதிமுக (உதயசூரியன் சின்னம்) - 4 தொகுதிகளிலும், சிபிஎம் - 2, சிபிஐ - 2 தலா தொகுதிகளிலும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட இதர கட்சிகள் - 4 இடங்களிலும் வெற்றிப் பெற்றன.

பாமக ஓகே
அதிமுக கூட்டணியில், அதிமுக தனித்து 65 இடங்களில் வெற்றிப் பெற்ற நிலையில், அடுத்தபடியாக பாமக 5 எம்.எல்.ஏ.க்களை அதிமுகவுக்கு துணையாக சட்டமன்றத்துக்கு அனுப்புகிறது. குறிப்பாக, பாஜக இதுவரை இல்லாத அளவுக்கு 4 எம்.எல்.ஏ.க்களை பெற்றுள்ளது. இதர கட்சிகள் 1 இடத்தில் வெற்றிப் பெற்றுள்ளன. மநீம கூட்டணி, நாம் தமிழர், அமமுக கூட்டணி எங்கும் வெற்றி பெறவில்லை. எனினும், நாம் தமிழர் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

மு.க.ஸ்டாலின் தேர்வு
இந்நிலையில் மாலை 6 மணியளவில் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சட்டமன்ற குழுத் தலைவர் ஒருமனதாக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.

மாலை 6 மணிக்கு
தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது. இதையடுத்து நாளை ஆளுநரைச் சந்தித்து ஸ்டாலின் ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து வரும் 7ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் நடைபெறும் விழாவில் அவர் முதல்வராகப் பதவியேற்றுக்கொள்வார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications