4 ஓட்டுதான் விழும் அண்ணாத்த.. சீமானை கலாய்த்த "முன்னாள் தம்பி" ராஜீவ் காந்தி!
சென்னை: அரசு பங்களாவில் தங்குவதற்கு தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்றும், சொந்த ஊரான அரணையூர் வார்டிலேயே 4 வாக்குகள்தான் விழும் எனவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை திமுக நிர்வாகி ராஜிவ் காந்தி விமர்சித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து அக்கட்சினர் திராவிட மாடல் அரசின் சாதனைகள் என பட்டியலிட்டு கொண்டாடி வருகின்றனர்.
அதேநேரம் அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஓராண்டுகால திமுக அரசை விமர்சித்து வருகின்றனர்.

கரண்ட் இல்லப்பா - சீமான்
அந்த வகையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு நேற்று ட்விட்டரில் அதிகளவில் டிரெண்டானது. "ஏப்பா சீமான்.. இந்த ஆட்சியின் ஒரு ஆண்டு சாதனையை டிவில போடுறாங்கலாம்.. அது என்னனு பார்க்கலாம்னு பாத்தா எழவு கரண்ட் இல்லப்பா.. அது தான் பெரியம்மா திராவிட மாடல்..!" என அவர் தமிழ்நாட்டில் நிலவும் மின் தடையை பிரச்சனையை சுட்டிக்காட்டி பதிவிட்டிருந்தார்.

அண்ணனின் பங்களாவில் கரண்ட் இல்லயா?
இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "கடும் கோடையிலும் உச்சபட்ச மின் தேவை இருந்த போதும் தமிழ்நாடு மின் வாரியம் மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகிறது. அண்ணன் சமீபத்தில் குடியேறி இருக்கும் கடற்கரையோர சொகுசு பங்களாவின் மின் இணைப்பு எண்ணைக் கொடுத்தால் அங்கு 'உண்மையிலேயே' மின் வெட்டு இருந்ததா என்பதை விசாரித்துச் சொல்கிறேன்." எனக் குறிப்பிட்டு இருந்தார்.

குடிசையில தங்க அனுமதி தாங்க - சீமான்
இதற்கு மீண்டும் ட்விட்டரில் பதிலளித்த சீமான், "மின்சாரத்துறை அமைச்சர் அன்புத்தம்பி செந்தில் பாலாஜி அவர்களுக்கு! அண்ணனின் கடற்கரையோர வாடகை சொகுசு பங்களாவில் நீங்கள் வந்து குடியிருங்கள். நீங்கள் ரொம்பநாளா குடியிருக்கிற 'குடிசையில' அண்ணன் தங்கிக்கொள்ள தயவுசெய்து அனுமதி கொடுங்கள்!" என தெரிவித்து இருந்தார்.

4 ஓட்டு தான் விழும் - ராஜிவ் காந்தி
சீமானின் இந்த ட்வீட்டுக்கு, நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியும், தி.மு.கவின் தலைமை கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளருமான ராஜீவ் காந்தி விமர்சித்துள்ளார். அதில், "மின்சாரத்துறை அமைச்சர் தங்கி இருப்பது அரசு பங்களா அதில் தங்க வேண்டும் என்றால் தேர்தலில் ஜெயிக்க.. ஜெயிக்க..ஜெயிக்க வேண்டுமே..நமக்கு தான் சொந்த ஊர் அரனையூர் வார்டிலயே 4 வாக்கு தான் விழும் என்ன செய்யலாம் சீமான் அண்ணாதே..." எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

விருந்தினராக வாங்க! - செந்தில் பாலாஜி
சீமானின் இக்கருத்துக்கு மீண்டும் செந்தில்பாலாஜி ட்விட்டரில் பதிலளித்துள்ளார். அதில், "குடிசையோ- மாளிகையோ அரசாங்க இல்லத்தில் தங்குவதற்கு, மக்கள் வாக்களித்து சட்டமன்றத்துக்கு அனுப்ப வேண்டுமே! விரும்பினால், கரூர் வீட்டில் விருந்தினராக தங்க எங்கள் அன்பு உண்டு. அதுசரி, சொகுசு பங்களாவில் மின்தடை ஏற்பட்டதாகச் சொன்னீர்கள். வீட்டின் மின் இணைப்பு எண்ணைக் கேட்டிருந்தேன்!" எனப் பதிவிட்டுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications