காமராஜரையே அசிங்கப்படுத்திய பிறகு திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கலாமா? கொளுத்திப்போட்ட அண்ணாமலை!
சென்னை: காமராஜரை பற்றி திமுகவினர் பேசியதை பார்த்தால் காங்கிரஸ் கட்சியினர் ஒருவர் கூட திமுக உடன் கூட்டணி வைக்க மாட்டார்கள் என முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை பெரம்பூரில் அண்மையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக ராஜ்யசபா எம்.பி திருச்சி சிவா, "மறைந்த திமுக தலைவர் கருணாநிதி என் 23, 24 வயதில் என்னை காரில் அழைத்துச் செல்வார். அப்போது என்னிடம் பழைய நிகழ்வுகளை சொல்வார். சிலர் சின்னப்பையனிடம் எதற்கு இதை எல்லாம் சொல்கிறார் என நினைப்பார்கள். ஆனால், அதனை நான் மேடையில் சொல்வேன் என கருணாநிதிக்கு தெரியும்.

ஒரு முறை மின்சாரத் தட்டுப்பாடு குறித்து தமிழகம் முழுவதும் காமராஜர் கண்டன கூட்டம் போடுகிறார். காமராஜருக்கு 'ஏசி' இல்லையெனில் உடம்பில் அலர்ஜி வந்துவிடும். அதற்காக அவர் தங்கும் அனைத்து அரசு சுற்றுலா மாளிகை விடுதிகளிலும் குளிர்சாதன வசதி அமைக்க உத்தரவிட்டதாக கருணாநிதி கூறினார். தன்னை எதிர்த்து பேசினாலும், அவரது உடல்நிலையை கருதி நான் உத்தரவிட்டேன் என்றும் கருணாநிதி கூறினார்.
அதேபோல், எமர்ஜென்சி காலத்தில் காமராஜரை கைது செய்ய துடித்தார்கள். தமிழகத்தில் அது முடியவில்லை. அந்த சமயத்தில் திருப்பதிக்கு ஒரு நிகழ்ச்சிக்காக செல்கிறார். அப்போது முதல்வர் அலுவலகத்தில் இருந்து 'தயவு செய்து நீங்கள் திருப்பதி செல்ல வேண்டாம்' என தகவல் போகிறது. இதற்கு, 'நான் திமுககாரன் இல்லை, காங்கிரஸ்காரன். என்னை போக வேண்டாம் என சொல்ல இவர் யார்' என்றார் காமராஜர்.
அதற்கு பதில் அளித்த கருணாநிதி, 'நான் திமுக தலைவர் அல்ல, தமிழகத்தின் முதல்வர். இது என் உத்தரவு' என்றார். 'நான் நாற்காலியே வேண்டாம் என சொல்லிவிட்டு வந்தவன். எனக்கு உத்தரவு போட இவர் யார், இவர் என்ன அவ்வளவு பெரிய ஆளா' எனக் கேட்டார். உடனே ராஜாராம் நாயுடுவை கூப்பிட்ட கருணாநிதி, 'அவரை புரிந்துகொள்ள சொல்லுங்கள். அவருக்கு உத்தரவுபோடும் அளவிற்கு நான் பெரியவன் இல்லை. ஆனால், அவரை கைது செய்ய மத்திய அரசு துடித்துக் கொண்டிருக்கிறது.
தமிழகத்திற்குள் இருக்கும் வரை நான் பாதுகாப்பேன். அதைத்தாண்டி, ஆந்திராவின் திருப்பதி சென்றால் என்னால் காப்பாற்ற முடியாது. எனவே தயவு செய்து போக வேண்டாம் என சொல்லுங்கள்' என்றார். அதன்பிறகே புரிந்துகொண்ட காமராஜர், இவ்வளவு பெரிய உள்ளமா அவருக்கு எனக்கூறி, கருணாநிதியின் கையை பிடித்துக்கொண்டு உயிர் போவதற்கு முன்பு, ''நீங்கள் தான் இந்த நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும்'' என்றாராம்." திருச்சி சிவா பேசினார்.
திருச்சி சிவா, காமராஜர் பற்றி இவ்வாறு பேசியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காமராஜர் பற்றிய திருச்சி சிவா பேச்சுக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, "காமராஜரை வீழ்த்தியதற்கு முழு காரணம் திமுகவே. 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிக அளவிலான பொய்களைக் கூறி காமராஜர் வீழ்த்தினர். அதன் பிறகு காங்கிரஸ் இரண்டாக பிளவு பட்ட போது, இந்திரா காந்தியோடு திமுக இணைந்து காமராஜர் தமிழகத்திலும் இந்திய அளவிலும் அரசியலில் மேலே வரக்கூடாது என்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்தனர். இதற்கு 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலே சாட்சி.
பின்னர், எமர்ஜென்சி காலத்தில் காமராஜர் உயிரிழந்த போது திமுகவின் அட்டகாசம் அதிகரிக்கத் தொடங்கியது. அதனால், காமராஜரை பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு தகுதி கிடையாது. காமராஜரை பற்றி திமுகவினர் பேசியதை பார்த்தால் ஒரு காங்கிரஸ் கட்சியினர் கூட திமுகவில் கூட்டணி வைக்க மாட்டார்கள். கர்மவீரர் காமராஜர் எளிமையானவர். அவர் தனது வீட்டுக்கு குடிநீர் வசதி கூட வேண்டாம் என்று கூறியவர். எந்த வித அரசு சுக போகங்களையும் அவர் அனுபவிக்காமல் இருந்து வந்தார்.
இப்படி இருக்கும் நிலையில், காமராஜர் பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு அறுகதை இல்லை. வரலாற்றைத் திருத்தி பேசிய திருச்சி சிவாவுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் காமராஜரை தாண்டி காங்கிரஸ் கட்சிக்கு வேறு எதுவும் அடையாளம் கிடையாது. இப்படிப்பட்ட தலைவரை அசிங்கப்படுத்திய பிறகு திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
காங்கிரஸ் தலைவரின் வெறும் கண்டன அறிக்கை மட்டும் போதுமா? உண்மையாகவே காமராஜர் ஆட்சி வேண்டுமென்று பேசும் காங்கிரஸ், திமுக கூட்டணியிலிருந்து வெளியே வரத் தயாரா? குறைந்தபட்சம் மானத்தை காப்பாற்ற தனித்துப் போட்டியிடத் தயாரா? கர்மவீரர் காமராஜரையே அசிங்கப்படுத்தியப் பிறகு அந்தக் கூட்டணியில் காங்கிரஸ் இருக்க வேண்டுமா? என்பதை நான் மட்டுமல்ல, சாதாரண மக்களும் கேட்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.
-
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு












Click it and Unblock the Notifications