ரூ.15 லட்சம் தந்தாரா? பணக்காரர்களின் புரோக்கராக மோடி.. திமுக கடும் ‛அட்டாக்’!திரும்பும் பாஜக
சென்னை: ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.15 லட்சம் ரூபாய் தருவதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் 20 குடும்பங்களுக்காக ரூ.68 ஆயிரம் கோடி வங்கி கடன் தள்ளுபடி செய்கிறார். இது மிகப்பெரிய ஊழல். இதுபோன்ற விஷயங்களில் பணக்கார்களின் புரோக்கர்களாக அவர் உள்ளார். அவர் ஏழை மக்களுக்காக ஆட்சி நடத்தவில்லை. பணக்காரர்களுக்கு ஆட்சி நடத்துகிறார்'' என திமுகவின் செய்தி தொடர்பு தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் சரமாரியாக விமர்சனம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் திமுக தலைமையில் அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது. முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் 20க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் திமுக செய்தி தொடர்பு தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த வேளையில் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு டிகேஎஸ் இளங்கோவன் பதிலளித்தார்.

இளங்கோவனிடம் கேள்வி
அப்போது ‛‛டெல்லியில் சமூக நீதி கூட்டமைப்பின் மாநாடு நடைபெற உள்ளது. இதில் பல கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளில் தேசிய தலைவர்கள் பங்கேற்றனர். இது 2024 தேர்தல் முன்னோட்டமாக பார்க்கலாமா'' என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது:

சமூக நீதி தேவையை உணர்த்த..
‛‛அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பு நெடுங்காலமாக நடந்து வருகிறது. சமூக நீதி கொள்கையில் இருந்து ஆட்சியாளர்கள் சரியாக செயல்படாவிட்டால் அவர்களை கண்டிப்பதற்காகவும், சமூக நீதியின் தேவையை உணர்த்துவதற்காகவும் தான் முன்னாள் நீதியரசர் தலைமையில் இது செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே கருத்தரங்குகள் நடந்துள்ளன. அந்த வகையில் தான் இன்றும் மாநாடு நடைபெற உள்ளது.

அரசியல் கள மாநாடு அல்ல
குறிப்பாக ஐஐடியில் இடஒதுக்கீடு முறை கடைப்பிடிப்பது இல்லை. ஐஐடியில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மை மக்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் சமூக நீதியில் அக்கறை காட்டும் கட்சிகளை இணைத்து இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது. இந்த நேரத்தில் இது தேவையான ஒன்றாகும். ஆனால் இது அரசியல் களத்துக்கான மாநாடு அல்ல. சமூக நீதியை உயர்த்தி பிடிக்கிற மாநாடு'' என்றார்.

ஆருத்ரா முறைகேடு பற்றி கேள்வி
இதையடுத்து ஆருத்ரா முறைகேட்டில் தமிழக பாஜக தலைவர்களுக்கும் தொடர்பு உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றதே? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு டிகேஎஸ் இளங்கோவன், ‛‛இதில் எவ்வளவு கோடி என கூறுங்கள். ரூ.68 ஆயிரம் கோடி வங்கி கடனை 10 முதல் 12 பணக்காரர்களுக்காக தள்ளுபடி செய்வதாக தகவல் வந்துள்ளது. பணக்காரர்களுக்கு உதவ தான் பாஜக ஆட்சி நடத்துகிறது. பிரதமர் மோடி, சொன்னதை செய்யமாட்டோம், சொல்லாததை செய்வோம் என்ற அடிப்படையில் செயல்படுகிறார்.

ரூ.15 லட்சம் தருவதாக..
ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.15 லட்சம் ரூபாய் தருவதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் 20 குடும்பங்களுக்காக ரூ.68 ஆயிரம் கோடி வங்கி கடன் தள்ளுபடி செய்கிறார். இது மிகப்பெரிய ஊழல். இதுபோன்ற விஷயங்களில் பணக்கார்களின் புரோக்கர்களாக உள்ளார். அவர் ஏழை மக்களுக்காக ஆட்சி நடத்தவில்லை. பணக்காரர்களுக்கு ஆட்சி நடத்துகிறார். சாதாரண மக்கள் வங்கியில் செலுத்திய பணத்தை பணக்காரர்களுக்காக மோடி வழங்கி வருகிறார். அதேபோல் தான் ஆருத்ரா மோசடி. ஆட்சியில் இருப்பதால் இதுபோன்ற விஷயங்களில் அவர்கள் துணிந்து ஈடுபடுகிறார்கள்'' என்றார்
-
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications