தமிழக பாஜக தலைவர் முருகனுடன் திமுக துணை பொதுச்செயலர் வி.பி. துரைசாமி திடீர் சந்திப்பு
சென்னை: தமிழக பாஜக தலைவர் எல். முருகனை அவரது இல்லத்துக்கு சென்று திமுக துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டசபை துணை சபாநாயகருமான வி.பி. துரைசாமி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
திமுகவை மிக கடுமையாக விமர்சித்து வருகிறது தமிழக பாஜக. தமிழக பாஜக தலைவர்கள், திமுகவினரை சமூக வலைதளங்களில் விமர்சிப்பது அவ்வப்போது சர்ச்சையாகியும் வருகிறது.

அதேபோல் மத்திய பாஜக அரசை திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து வருகிறார். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை விமர்சித்து தொடர்ந்து அறிக்கைகளையும் ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார்.
இப்படி திமுகவும் பாஜகவும் அரசியல் களத்தில் இரு எதிர் எதிர் முனைகளில் நிற்கின்றன. இந்த நிலையில் திமுகவின் மூத்த தலைவரான வி.பி. துரைசாமி, தமிழக பாஜக தலைவர் முருகனை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதாவது:
தி.மு.க மாநில துணை பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற துணை சபாநாயகர் திரு.வி.பி.துரைசாமி அவர்கள் இன்று மாலை தமிழக பாஜக தலைவர் டாக்டர் திரு.எல்.முருகன் அவர்களை சந்தித்து தமிழக பாஜக தலைவராக அவர்கள் பொறுப்பேற்று சிறப்பாக செயல்படுவதற்கு வாழ்த்து தெரிவித்தார்கள் ...
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications