சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சட்டசபை தேர்தல்: பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகள் திமுகவுக்கு சாதகமா? பாதகமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    தேர்தல் வல்லுநர் பிரசாந்த் கிஷோரை அழைத்தது திமுக!

    சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகள் திமுக எந்த வகையில் கை கொடுக்கும்? என்பதுதான் அக்கட்சியின் சீனியர்களிடையேயான விவாதப் பொருள்.

    தமிழகத்தில் 2016 தேர்தலில் வியூக வல்லுநர்களான சுனில் திமுகவுக்கும் ஜான் ஆரோக்கியசாமி பாமகவுக்கும் ஆலோசனைகளை வழங்கினர். பாமகவின் அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார்.

    மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்கிற சுவரொட்டி இன்றளவும் தமிழகத்தில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுகவுக்கு சுனில் தலைமையிலான டீம் உதவி செய்தது.

    பாஜக அரசகுமாரின் பேச்சு... சசிகலா சொன்ன ஆரூடம்.. மீண்டும் பரபரப்பு களமாகிறதா தமிழக அரசியல் களம்?பாஜக அரசகுமாரின் பேச்சு... சசிகலா சொன்ன ஆரூடம்.. மீண்டும் பரபரப்பு களமாகிறதா தமிழக அரசியல் களம்?

    தமிழகத்தில் பிகே

    தமிழகத்தில் பிகே

    இதனைத் தொடர்ந்து 2021 தேர்தலில் பிரசாத் கிஷோர் பெயர் தொடர்ந்து தமிழக அரசியலில் அடிபட்டு வருகிறது. முதலில் அதிமுக, பிரசாந்த் கிஷோரை அணுகியதாக தகவல்கள் வெளியாகின.

    திமுக பேச்சுவார்த்தை நிறைவு

    திமுக பேச்சுவார்த்தை நிறைவு

    பின்னர் மநீம தலைவர் கமல்ஹாசனை அவரது இல்லத்தில் பிரசாத் கிஷோர் சந்தித்து பேசினார். தற்போது பிரசாந்த் கிஷோருடன் திமுக தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி முடித்திருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை ஆலோசகராக இருந்த சுனில் விலகியதால் பிரசாந்த் கிஷோரை திமுக அழைத்துள்ளது.

    திமுகவுக்கு சாதகம்?

    திமுகவுக்கு சாதகம்?

    2021 தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற தீவிரம் காட்டும் திமுகவுக்கு இது கை கொடுக்கும் என்கிற கருத்தை அரசியல் பார்வையாளர்கள் முன்வைக்கின்றனர். அதேநேரத்தில் திமுக சீனியர்கள் வேறு ஒரு கருத்தை முன்வைக்கின்றனர்.

    தலைமைக்கும் தொண்டர்களுக்கும் இடைவெளி

    தலைமைக்கும் தொண்டர்களுக்கும் இடைவெளி

    கருணாநிதி தலைவராக இருந்த போது கட்சித் தொண்டர்களிடம் மிக நெருக்கமாக இருந்தார்; ஆனால் ஸ்டாலின் தலைவரான பின்னர் இந்த நெருக்கத்தில் இடைவெளி இருக்கிறது.

    சீனியர்களிடையே அதிருப்தி?

    சீனியர்களிடையே அதிருப்தி?

    அத்துடன் இதுபோல் சுனில் டீம், பிரசாந்த் கிஷோர் டீம் என வெளிநபர்கள் திமுக விவகாரங்களில் தலையிடுவது கட்சி தலைமைக்கும் தொண்டர்களுக்குமான இடைவெளியை அதிகப்படுத்துமே தவிர உற்சாகத்தைத் தராது எனவும் சுட்டிக்காட்டுகின்றனர். ஒவ்வொரு பகுதி திமுகவினருக்கும் அந்த பகுதியின் பாசிட்டிவ், நெகட்டிவ் அத்துப்படியாக இருக்கும் என்கிற போது இவர்கள் புதியதாக என்ன கண்டுபிடிப்பார்கள்? என்கிற கேள்வியையும் சீனியர்கள் முன்வைக்கின்றனர்.

    சீனியர்கள் கருத்து

    சீனியர்கள் கருத்து

    ஆட்சிக்கு வந்தே தீர வேண்டும் என்ற இலக்கோடு பணியாற்றினால் வெல்ல முடியும் என்கிற நம்பிக்கையை கட்சியினரிடத்தில் திமுக தலைமை தீவிரமாக விதைத்தாலே போதும்.. இந்த வியூக வல்லுநர்கள் உதவியே தேவை இல்லை என்பதும் திமுக சீனியர்களின் கருத்து.

    English summary
    Accroding to the DMK Senior leaders they are not like the party join hands with Poll Strategist Prashant Kishor for the Assembly elections 2021.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X