போடியில் 3 முறை வென்ற ஓ பன்னீர்செல்வம்.. இம்முறை திமுக ஜெயித்தே ஆக வேண்டும்.. ஸ்டாலின் அதிரடி
சென்னை: போடிநாயக்கனூர் தொகுதியில் 2011, 2016, 2021 ஆகிய 3 சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் தி.மு.க. 'ஹாட்ரிக்' தோல்வி அடைந்துள்ளது. எனவே இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் வேட்பாளரை நிறுத்தினாலோ அல்லது கூட்டணி கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்தினாலோ, இந்த முறை தி.மு.க. கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்' என்று அந்த தொகுதி நிர்வாகிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டிப்புடன் கூறியிருக்கிறார்.
2026 சட்டமன்ற தேர்தல் வரும் 2026ம் ஆண்டு ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக வரும் மார்ச் மாதத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. திமுக காங்கிரஸ் கூட்டணி ஒரு அணியாகவும், பாஜக அதிமுக கூட்டணி ஒரு அணியாகவும், விஜய்யின் தமிழக வெற்றி கழகம் தனியாகவும் (கூட்டணியாக யார் வருவார்கள் என்பது இப்போது வரை தெரியவில்லை), சீமானின் நாம் தமிழர் கட்சி ஒரு அணியாகவும் போட்டியிட உள்ளன.

விஜய் தனித்து நிற்கிறார்
இதில் விஜய்யின் தவெக தனித்து நின்றால், ஆளும் கட்சிக்கு எதிராக உள்ள வாக்குகள் பல கூறுகளாக பிரியும் என்பதால், எளிதாக திமுக வெற்றி பெறும் என அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இதனால் அதிமுக, பாஜக கட்சிகள், விஜய்யின் தவெகவை தங்கள் கூட்டணியில் கொண்டுவர முயற்சித்தனர். ஆனால் இன்று வரை விஜய் எந்த பதிலும் கூறவில்லை.. தனித்து தான் நிற்போம் என்று மட்டும் திட்டவட்டமாக கூறி வருகிறார். விஜய் தனித்து தான் நிற்பார் என்பது உறுதியாக உள்ளதால், திமுக உற்சாகமாக உள்ளது. ஏனெனில் 2021ஐ விட இந்த முறை எளிதாக பல தொகுதிகளில் வெல்ல முடியும் என நம்புகிறது.
திமுக புதிய முயற்சி
கூட்டணி பலம், ஆளும் கட்சி என்ற பலம் ஆகியற்றுடன், 2018ம் ஆண்டு முதல் 2019, 2021, 2024 என பல்வேறு தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி ஆகிய பாசிட்டிவ் காரணமாக இதுவரை ஜெயிக்க முடியாத, ஜெயிக்காத தொகுதிகளில் எல்லாம் இந்த முறை திமுக களம் கண்டு வெல்ல விரும்புகிறது.
திமுக வெற்றி பெற திட்டம்
2024 நாடாளுமன்ற தேர்தலில் தேனியை வாங்கி வெற்றி பெற்றது திமுக. இதேபோல் கோவை தொகுதியையும் வாங்கி வென்றது. தமிழகத்தில் 2024 தேர்தலில் ஒரு தொகுதியில் கூட அதிமுக, பாஜக கூட்டணி வெற்றி பெறவில்லை. அந்த அளவிற்கு திமுக கூட்டணி வென்றது. இந்த நிலையில், இந்த முறை அதிமுக வலிமையாக உள்ள தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் என்று திமுக முனைப்பு காட்சி வருகிறது. இதற்காக திமுக தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது.
உடன்பிறப்பே வா
தி.மு.க.தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் 'உடன்பிறப்பே வா' என்ற தலைப்பில் தொகுதி வாரியாக தி.மு.க. நிர்வாகிகளை அழைத்து தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் அவர், சென்னை அண்ணா அறிவாலயத்தில், போடிநாயக்கனூர், சாத்தூர் ஆகிய 2 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளிடம் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.
ஸ்டாலின் பேச்சு
அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், 'உங்கள் தொகுதியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறாதவர்களில் தகுதியானவர்கள் இருந்தால், அவர்களுக்கு உரிமைத்தொகை கிடைப்பதற்கு உதவிட வேண்டும். தி.மு.க. ஆட்சி 7-வது முறை அமைய வேண்டும். அதற்கு அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, மகளிருக்கான விடியல் பயண திட்டம் உள்ளிட்ட நம்முடைய அரசின் சாதனைகளை தொகுதி முழுவதும் விளம்பரப்படுத்த வேண்டும் என்று' என்று கூறினார்.
போடிநாயக்கனூர் தொகுதி
போடிநாயக்கனூர் தொகுதியில் 2011, 2016, 2021 ஆகிய 3 சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் தி.மு.க. 'ஹாட்ரிக்' தோல்வி அடைந்துள்ளது. எனவே இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் வேட்பாளரை நிறுத்தினாலோ அல்லது கூட்டணி கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்தினாலோ, இந்த முறை தி.மு.க. கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்' என்று அந்த தொகுதி நிர்வாகிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டிப்புடன் கூறியிருக்கிறார்.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன்












Click it and Unblock the Notifications