ஒடிசா, பீகார்.. தமிழர்களை தொடர்ந்து விமர்சிக்கும் மோடி! இத்தனை வெறுப்பும் ஏன்? திமுக கேள்வி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பீகார் சட்டசபை தேர்தலில் தமிழ்நாடு குறித்து பிரதமர் மோடி பேசியது சர்ச்சையாகி உள்ளது. மோடியின் பேச்சுகளுக்கு திமுக தரப்பு கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளது.

பீகார் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர்கள் பீகாரிகளை அவமதிக்கிறார்கள், தமிழ்நாட்டில் திமுக தலைவர்கள் பீகார்காரர்களை துன்புறுத்துகிறார்கள், ஆனாலும் ஆர்ஜேடி அமைதியாக இருக்கிறது. பஞ்சாபின் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் ஒருவர் பீகாரைச் சேர்ந்தவர்கள் தனது மாநிலத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டேன் என்று கூட கூறினார் - அந்த நேரத்தில், தற்போது நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் காந்தி குடும்பத்தின் மகள் கைதட்டி ஆதரித்துக்கொண்டிருந்தார் " என்று பிரதமர் மோடி கூறினார்.

Bihar Assembly election 2025 2025 narendra modi

மோடி சர்ச்சை பேச்சு

கார் சட்டசபை தேர்தலில் தமிழ்நாடு குறித்து பிரதமர் மோடி பேசியது சர்ச்சையாகி உள்ளது. மோடியின் பேச்சுகளுக்கு திமுக தரப்பு கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளது. இது தொடர்பாக திமுக தரப்பு எழுப்பி உள்ள கேள்வியில், குமரி முதல் இமயம் வரை விரிந்த இந்த இந்திய நாடு எத்தனையோ பிரதமர்களை பார்த்திருக்கிறது; ஆனால் மத, இன, மொழி, சாதிய அவதூறுகளை தேர்தல் வெற்றிக்காக மேடைகளில் பரப்புவதும், அதனையே முழு நேர தொழிலாக செய்யும் பிரதமரை இப்போது தான் இந்திய நாடு பார்க்கிறது.

முன்னதாக, உத்தரப் பிரதேச மக்களை இழித்தும் பழித்தும் தென்னிந்தியர்கள் பேசுவதாகத் தமிழ்நாட்டு மக்கள் மீது அபாண்டமான பழியைச் சுமத்தி இருந்தார் பிரதமர் மோடி. பின்னர், ஒடிசா மாநில தேர்தல் பரப்புரையின் போது, பூரி ஜெகந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் தொலைந்துபோன சாவிகள் தமிழ்நாட்டில் இருப்பதாகப் பேசி, தமிழர்களை திருடர்களாக சித்தரித்தார் பிரதமர் மோடி.

மோடி வெறுப்பு பேச்சை கக்கி இருக்கிறார்

அப்போதே கடுமையான கண்டனங்களை தமிழ்நாடு எழுப்பிய போதும் அவர் திருந்தியதாக தெரியவில்லை. இப்போது மீண்டும் "தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்களை திமுகவினர் துன்புறுத்தி வருவதாக" தேர்தல் பிரச்சார மேடையிலேயே வெறுப்பு பேச்சை கக்கி இருக்கிறார்.

தமிழ்நாட்டின் கல்வி - வேலைவாய்ப்பு - சுகாதார கட்டமைப்பு இந்தியாவுக்கே முன்னோடியாக இருப்பதால்தான் பீகார் உள்ளிட்ட பல்வேறு வடமாநில தொழிலாளர்களும் இங்கே வருகின்றனர்; தமிழ்நாடு அரசு அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்தையும் கவனித்துக் கொள்கிறது. தமிழ்நாடு அரசையும், மாநிலத்தையும் அவர்கள் பாராட்டிய காணொளிகளும் ஏராளம் உண்டு.

தமிழர்களை பிடிக்கும் என வேடம்

இதனை எல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாமல், தேர்தல் பரப்புரையில் பேச கொள்கை - கோட்பாடுகள் - செயல்திட்டங்கள் எதுவும் இல்லாததால், வெறுப்புப் பேச்சுகளின் மூலம் வெற்றி பெறலாம் என மக்களிடையே பகை உணர்வையும் - மாநிலங்களுக்கு இடையே குரோதத்தையும் தூண்டி வருவது நாட்டுக்கு நல்லதல்ல! தமிழர்கள் மீது மோடிக்கு இத்தனை காழ்ப்பும் வெறுப்பும் ஏன்?

தமிழ்நாட்டுக்கு வந்தால் திருவள்ளுவரை பிடிக்கும், தமிழை, தமிழர்களை பிடிக்கும் என வேடம் போடுவதும், வெளி மாநிலங்களில் தமிழ்நாட்டு மக்களை திருடர்களாக, மோசமானவர்களாக இழித்தும் பழித்தும் பேசும் வழக்கத்தைப் பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ள வேண்டும்! இல்லையெனில் தமிழ்நாடு தக்க பாடம் புகட்டும், என்று திமுக தரப்பு பதிலடி கொடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+