தென் தமிழகமே குலுங்க போகுது.. திமுக தென்மண்டல இளைஞரணி மாநாடு.. ஸ்டாலின் மாஸ் திட்டம்
சென்னை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு சில வாரங்களே உள்ளது. ஆட்சியை தக்க வைக்க திமுக, ஆட்சியை பிடிக்க அதிமுக - பாஜக கூட்டணி மல்லு கட்டுகிறார்கள். நாம் தமிழர் மற்றும் தவெகவும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். அரசியல் கட்சிகளின் பிரச்சாரம், பரபர வியூகங்களால் தேர்தல் களம் இப்போதே பரபரக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் திமுக இளைஞர் அணி தென் மண்டல நிர்வாகிகள் மாநாட்டை வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி விருதுநகரில் பிரம்மாண்டமாக நடத்த திமுக தலைமை முடிவு செய்துள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. பல்வேறு திட்டங்களை அறிவித்து வரும் நிலையில், கட்சி ரீதியாகவும் கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். மண்டலம் வாரியாக இளைஞரணி மற்றும் மகளிரணி மாநாடுகளை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே வடக்கு மண்டலத்தில் இளைஞரணி மாநாடு, மேற்கு மண்டலத்தில் மகளிரணி மாநாடு நடத்தப்பட்டுள்ளது. தற்போது அடுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கடந்த 14.12.2025 அன்று திருவண்ணாமலை, கலைஞர் திடலில், 28 கழக மாவட்டங்களுக்கு உட்பட்ட 91 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் முதல் பாகம் வரை, வாக்குச்சாவடி அளவிலான இளைஞர் அணி அமைப்பாளர் - துணை அமைப்பாளர்கள் என 1 லட்சத்து 30 ஆயிரம் இளைஞர் அணி நிர்வாகிகள் வெண்சீருடை அணிந்து, பார் சிறுத்ததோ, படை பெருத்ததோ என்று சொல்லத்தக்க வகையில், அகிலமே வியக்கும் வண்ணம் மாபெரும் எழுச்சியோடு திமுக இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற்றது.
திமுக தென் மண்டல இளைஞரணி மாநாடு
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றிட - துணை முதலமைச்சரும், திமுக இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வருகிற 07.02.2026 தேதி சனிக்கிழமை, மாலை 4.00 மணி அளவில், விருதுநகர், 'கலைஞர் திடலில் "தென் மண்டல திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற உள்ளது.
பக்கா பிளான்
இந்த நிகழ்ச்சியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, கனிமொழி கருணாநிதி எம்.பி., திருச்சி சிவா எம்.பி, ஆ.ராசா எம்பி, அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி, மு.பெ.சாமிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
இதேபோல அனைத்து தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், தென் மண்டலத்தை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், நிர்வாகிகள் கலந்து கொள்ளவுள்ளனர்' என குறிப்பிடப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரத்தை பாஜக தீவிரமாக எடுத்து அரசியல் செய்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அங்கு திமுக பிரம்மாண்ட மாநாடு நடத்துவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
தவெகவில் சீட் கிடைக்காத விரக்தி.. திமுகவில் இணைந்தார் அஜிதா! பின்னணியில் அனிதா! -
“குடிநீர் இன்றி கிராமமே காலி செய்ததா?”- அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு கருணாஸ் கொடுத்த பதிலடி! -
திமுக வேட்பாளர் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு.. பரபரக்கும் கரூர்! -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
"சாக்கடைக்கு சமமாக வந்து விழுகிற எடப்பாடியின் வார்த்தைகளுக்கு பாடம் புகட்டுவோம்”.. கொதித்த ஸ்டாலின்! -
ராகுல் காந்தி தமிழகத்திற்கு வர மறுத்துவிட்டாரா? பிரச்சாரம் தாமதமாவது ஏன்? - கிரிஷ் சோடங்கர் விளக்கம் -
திமுகவை தொட முடியுமா என்ன? விஜய்க்கு சிலுவை ஆசீர்வாதம்! அப்போ சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
நெல் ஊக்கத்தொகை விவகாரம்.. கடிதத்தை வெளியிட்டு.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்












Click it and Unblock the Notifications