12 சீட் கேட்கலாம் பிகிலு 12 வேட்பாளர் யாரு இருக்கா? காங்கிரஸை ஓடஓட விரட்டும் ஸ்டாலின், அகிலேஷ்!
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் டபுள் டிஜிட் சீட் கேட்கும் காங்கிரஸ் கட்சியிடம் வெல்லும் வாய்ப்புள்ள வேட்பாளர்கள் யார் என திமுக தலைமை கேட்பதால் காங்கிரஸ் கட்சியால் எதுவும் பேசமுடியவில்லையாம். உத்தரப்பிரதேசத்திலும் திமுக தலைமையை போலவே சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸிடம் வேட்பாளர் பட்டியல் கேட்பதால் காங்கிரஸ் மேலிடம் கனத்த மவுனம் காக்கிறதாம்.
லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த 'இந்தியா' கூட்டணியை எதிர்க்கட்சிகள் உருவாக்கி உள்ளன. "இந்தியா" கூட்டணியில் பிரதான எதிர்க்கட்சிகள் இடம்பெற்றுள்ளன. நாடு தழுவிய அளவில் பாஜகவுக்கு எதிரான பொதுவேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பாக "இந்தியா" கூட்டணி விவாதித்து வருகிறது.

அத்துடன் ஒவ்வொரு மாநிலத்திலும் வெல்லும் வாய்ப்புள்ள இடங்களை மட்டுமே கூட்டணி கட்சிகள் கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதும் "இந்தியா" கூட்டணிக்குள் உருவாகி இருக்கும் புரிதலாகவும் கூறப்படுகிறது.
ஸ்டாலின் போட்ட போடு: தமிழ்நாட்டில் கடந்த லோக்சபா தேர்தலில் 10 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 தொகுதிகளில் வென்றது. இந்த முறை தமிழ்நாட்டில் எப்படியாவது டபுள் டிஜிட் தொகுதிகளை ஆகக் குறைந்தது அதே 10 தொகுதிகளையாவது பெற வேண்டும் என்பதில் தமிழ்நாடு காங்கிரஸ் முட்டி மோதுகிறது என்பதை ஏற்கனவே நாம் குறிப்பிட்டிருந்தோம். ஆனால் தமிழ்நாட்டில் "இந்தியா" கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுகவோ, ஏற்கனவே வெற்றி பெற்ற 8 இடங்களில் தற்போது உறுதியாக வெல்லும் வாய்ப்புள்ள 4 அல்லது 5 தொகுதிகளைத்தான் தர முடியும் என்கிறதாம் இது தொடர்பாக சோனியா காந்தியிடமும் முறையிட்டுள்ளதாம் தமிழ்நாடு காங்கிரஸ் தரப்பு.

அகிலேஷ் அதிரடி: இதேபோல உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் காங்கிரஸை கதிகலங்க வைத்துள்ளாராம். உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சிதான் "இந்தியா" கூட்டணியில் பெரிய கட்சி. இப்போது தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை காங்கிரஸ் நடத்துகிறது. சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், எங்களிடம் காங்கிரஸ் கட்சி இத்தனை தொகுதி எல்லாம் கேட்க முடியாது; நாங்கள் கொடுக்கிற தொகுதியை வாங்கிக் கொள்ள வேண்டும்; ஏனெனில் வெற்றி வாய்ப்பு உறுதி செய்கிற தொகுதியைத்தான் தருவோம். அது சிங்கிள் டிஜிட்டாக இருந்தாலும் என கறாராக கூறியிருந்தார்.
அகிலேஷும் அதே நிபந்தனை: ஆனாலும் காங்கிரஸ் ரொம்பவே பிகு செய்து கொண்டு 12 சீட் வரை கேட்கிறது. இதனால் கடுப்பாகிப் போன அகிலேஷ் யாதவ், 12 சீட் தருகிறோம்.. 12 தொகுதிகளிலும் போட்டியிட்டு உறுதியாக வெல்லும் வேட்பாளர்கள் யார் என்கிற பட்டியலை எங்க கொஞ்சம் கொடுங்க என நிபந்தனை விதித்திருக்கிறார். இதனால் காங்கிரஸ் கட்சி கையை பிசைந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் திமுக கொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருப்பதால் அகிலேஷ் யாதவின் நிபந்தனைகள் குறித்து வழக்கம் போல கனத்த மவுனம் காக்கிறதாம். அந்தோ பரிதாபம்தான்!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications