வருத்தப்படுவீங்க.. இனி இப்படியொரு சம்பவம் நடக்கக்கூடாது! ஏபிவிபிக்கு திமுக மாணவரணி எச்சரிக்கை!
ஏபிவிபி மாணவர் அமைப்புக்கு திமுக மாணவரணி கடும் எச்சரிக்கை
சென்னை: தமிழர்களின் வீரத்தை இனிமேலும் உணரவில்லை என்றால் நிச்சயம் வருத்தப்படுவீர்கள் என ஏபிவிபி மாணவர் அமைப்புக்கு திமுக மாணவரணி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு மாணவர்கள் மீதான தாக்குதல் போன்று இனி இப்படியொரு சம்பவம் நடப்பின் டெல்லிக்கே சென்று எதிரிகளை வெல்வோம் என திமுக மாணவரணி அறிவித்துள்ளது.

திமுக மாணவரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இது தொடர்பாக கொண்டுவரப்பட்ட தீர்மான விவரம் வருமாறு;
பா.ஜ.க.வின் ஆர்.எஸ்.எஸ். சிந்தனைக் கொண்ட ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பான குண்டர் படைக்கு உரத்து கூறவேண்டிய நேரம் வந்திருக்கிறது. கனக விசயரின் முடித்தலை நெரித்துக் கல்லினை வைத்தவர்கள் நாங்கள்! இமயமலையினில் மீன்கொடி ஏற்றி புகழ்பட வாழ்ந்தவர்கள் நாங்கள்!
வடக்கே இமயம் சென்று கொடியேற்றிய தமிழர்களின் வீரம், இன்னும் மாய்ந்து விடவில்லை என்பதைப் அவர்கள் உணர வேண்டும்! இல்லையேல் வருத்தப்படுவார்கள்!

இனி இப்படியொரு சம்பவம் நடப்பின், கழகத் தலைவர்- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையேற்று, கழக இளைஞர் அணிச் செயலாளரும், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான இளந்தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் மாணவர் அணி கரம் கோர்த்து டெல்லி செல்வோம்! எதிரிகளை வெல்வோம்!
"யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல். அரசியல் என்பது ரத்தம் சிந்தாத யுத்தம்" எச்சரிக்கிறோம்! வாலை சுருட்டி வையுங்கள்! என்று ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை கொண்ட பா.ஜ.க.வின் ஏ.பி.வி.பி. அமைப்பினருக்கு தி.மு.க. மாணவர் அணியின் இக்கூட்டம் தனது கண்டனத்தை பதிவு செய்கிறது.












Click it and Unblock the Notifications