சனாதனம்.. திருத்திக் கொள்ளாவிட்டால் போராட்டம்தான்.. ஆளுநர் ஆர்.என்.ரவியை எச்சரித்த திமுக மாணவர் அணி!
சென்னை: சனாதனத்தை உயர்த்தி பிடித்துக் கொண்டு, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவர் வாக்கிற்கு எதிராக அனைத்து செயல்களையும் செய்து கொண்டு, தமிழ்நாடு பாடத் திட்டத்தை விமர்சித்து வரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமது அணுகுமுறை மாற்றிக் கொள்ளாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என திமுகவின் மாணவர் அணி எச்சரிக்கை விடுத்துள்ளது.
தி.மு.க மாணவர் அணியின் மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் "தமிழ்நாட்டின் பாடத்திட்டத்தை விமர்சித்துள்ள ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சுக்கு கண்டனம்" என்ற தலைப்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்: சனாதனத்தை உயர்த்தி பிடித்துக் கொண்டு, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவர் வாக்கிற்கு எதிராக அனைத்து செயல்களையும் செய்து கொண்டு, வள்ளுவருக்கு காவிச் சாயம் பூசியும், உலகில் அனைவரும் சமம் என்று சொன்ன வள்ளலார் சனாதனவாதி என்று புதிய கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் ரவிக்கு கண்டனம்: அனைத்து பல்கலைக்கழகங்களையும் அதன் துணை வேந்தர்களை கொண்டு முடக்கி வைத்து, கல்லூரிகளில் சமத்துவ, சமூகநீதி, தமிழ் உணர்வு இவற்றிற்கெல்லாம் எதிரான செயல்களை ஊக்குவிக்கக்கூடிய வகையில் செயல்பட்டு கொண்டிருக்கும் ஆளுநர் சமீபத்தில், தமிழ்நாட்டிலுள்ள கல்வி முறை தரமற்றது என்று விமர்ச்சித்திருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது.
திராவிட சிந்தனைக்கு எதிரானது: ஆளுநர் ரவியின் அபத்தமான பேச்சுகள் மாநில அரசிற்கு எதிராகவும், திராவிட இயக்க சிந்தனைக்கு எதிராகவும், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் உள்ளது. சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் மனுதர்ம சாஸ்திரத்தை விவரிக்கும் கருத்துப்படங்களும், அறிவியலுக்கு மாறான புராண இதிகாச கருத்துகளை உள்ளடக்கிய பாடங்களும் இருப்பதை நாடே அறியும்.
தமிழ்நாடு அரசின் பாடத் திட்டம்: இந்திய விடுதலை போராட்டக் களத்தில் தமிழர்களின் பங்களிப்பை கூட மறைக்கும் பாடத்திட்டத்தை சி.பி.எஸ்.சி. கொண்டிருக்கும் நிலையில், அறிவியல் பூர்வமாகவும், தமிழர்களின் பண்பாடு மற்றும் தொன்மைகளை முழுக்கச் சொல்லியும், தமிழ்நாட்டில் குறிப்பாக தென்னகத்தில் ஏற்பட்ட சமூக விடுதலை போராட்டத்தின் வரலாறுகளையும் அவசியம் அறிந்து பாடத்திட்டத்தில் கொண்டுள்ளது தமிழ்நாடு அரசின் பாடத்திட்டம். அறிவியல் பூர்வமான அத்தனை முன்னெடுப்புகளையும், உலகளாவிய தொழில்நுட்ப வளர்ச்சியினை விரைவாக பாடத்திட்டத்தில் கொண்டு வந்து சேர்த்ததும் தமிழ்நாடு அரசு என்பதை மறுக்க முடியாது.
அரசு பாடத்தைப் படித்தவர்கள்தான்: தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ட பட்டதாரிகளும், பொறியியல் பட்டதாரிகளும் இன்று உலகின் தலைசிறந்த பொறியாளர்களாக, விஞ்ஞானிகளாக விளங்குவதே இதற்கு சான்றாகும். இஸ்ரோ என்று அழைக்கப்படுகிற இந்திய விண்வெளி ஆராய்சி நிலையத்தின் மிகப்பெரிய தலைமை பொறுப்பை வகித்தவர்கள் எல்லாம் தமிழர் என்பதும், அவர்கள் அரசுப் பள்ளியில் பயின்றவர்கள் என்பது கூடுதல் சான்றாகும். உலகின் தலைசிறந்த மருத்துவர்கள பயின்றது நமது தமிழ்நாட்டின் பாடத்திட்டங்களில் தான்.
ஆளுநர் ரவிக்கு எச்சரிக்கை: இந்நிலையில், தமிழ்நாடு அரசின் பாடத்திட்டம் மேம்படுத்தப்பட வேண்டும், அது தரம் குறைவாக உள்ளது என்று விமர்சிக்கக்கூடிய ஆர்.எஸ்.எஸ். பயிற்சியாளரைப் போன்று செயல்படும் ஆளுநர் ஆர்.என். ரவியின் பேச்சுகளுக்கு தி.மு.க. மாணவர் அணி கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறது. அவரது இந்த அணுகுமுறையை திருத்திக் கொள்ளாமல் இருப்பாரேயானால், கழகத் தலைவரின் அனுமதிப் பெற்று விரைவில் தி.மு.க. மாணவர் அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களை முன்னெடுக்கும் என்று இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.
-
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
உதயநிதி ஸ்டாலினை மதிக்காத கேஎன் நேரு? எழுந்து நின்றும் கண்டுகொள்ளவில்லையே.. இருவருக்கும் சண்டையா? -
முடிவுக்கு வராத காங்கிரஸ் - திமுக சீட் ஷேரிங் பிரச்னை.. காங். தேர்வு செய்யும் 28 தொகுதிகளால் சிக்கல் -
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள்.. ஒன்றில் மட்டுமே தனி சின்னம்! தொகுதி பங்கீடு கையெழுத்து -
தமிழக தேர்தல் வரலாறு: கருணாநிதிக்கு உதயசூரியன்.. நெடுஞ்செழியனுக்கு சேவல்.. திமுகவின் முதல் சம்பவம்! -
பிரேமலதா குடும்பத்திற்கு ஸ்டாலின் தரும் இன்னொரு சர்ப்ரைஸ்! பிரபாகரன் போட்டியிடும் தொகுதி -EXCLUSIVE -
காமராஜர் ஆட்சிக்கு வேட்டு.. இந்திரா ஆட்சிக்கு ஓட்டு.. திமுக ஆடிய டபுள் கேம்! -
வைத்திலிங்கத்திற்கு தஞ்சை திமுக ஷாக்! ஆதிக்கம் செலுத்தும் உதயநிதி ஆதரவாளர்? ஒரத்தநாடு என்னாகும்? -
நெல்லை முபாரக் எங்கே போட்டி? திமுகவிடம் எஸ்டிபிஐ எதிர்பார்க்கும் தொகுதி எது? பரபரக்கும் தேர்தல் களம் -
சிலிண்டர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு! திமுக சரமாரி குற்றச்சாட்டு -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
முக்குலத்தோர் வாக்குகள்.. 6 மாவட்டங்களில் திமுகவின் மைக்ரோ பிளான்.. ஓபிஎஸ் மூலமாக அதிமுகவுக்கு செக்!












Click it and Unblock the Notifications