சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நான் மேலே, நீ கீழே".. இதான் "அவங்க".. இந்த நாடு பாஜகவால்தான் உடைய போகுது.. கரு. பழனியப்பன் பொளேர்

முக ஸ்டாலின் நிச்சயம் முதல்வர் ஆக வேண்டும் என்று கரு பழனியப்பன் கூறியுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "இந்த நாடு பாஜகவால்தான் உடையப்போகிறது... ஒரே மொழி, ஒரே கலாச்சாரத்தை திணித்தால் யாரும் தாங்க மாட்டாங்க.. இந்த தேர்தல் ஆரியத்திற்கும் - திராவிடத்திற்கும் நடக்கும் போர்.. இந்தத் தேர்தல் சித்தாந்தத்திற்கிடையே நடக்கும் சண்டை" என்று டைரக்டர் கரு.பழனியப்பன் பேசியுள்ளார்.

சமீப காலமாகவே கரு.பழனியப்பனின் பிரச்சாரங்கள் சூடு பிடித்து வருகின்றன.. திமுக உறுப்பினர்களுக்கு வாக்கு சேகரித்து வரும் கரு.பழனியப்பன், பாஜக மீதான தன்னுடைய அதிருப்திகளையும் முன்வைத்து பேசி வருகிறார்.

திருச்சி திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து, தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் சார்பில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது இதுதான்:

மக்கள் நலன்

மக்கள் நலன்

"பொதுவா தமிழ்நாட்டில் தேர்தல் என்றாலே 2 பெரிய கட்சிகளுக்கிடையேயான போட்டியா தான் இருந்தது. காங்கிரஸ் - திமுக, அப்பறம் திமுக - அதிமுக.. இப்படித்தான் போட்டி இருந்தது. ஆனால் இன்னைக்கு, இந்த முறை மக்கள் நலன் குறித்து சிந்திப்பவர்கள் ஓர் அணியாகவும், மக்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டவர்கள் ஓர் அணியாகவும் போட்டியிடுகிறார்கள். ஸ்டாலின்னு ஒருத்தர் இந்த தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக வந்துவிடக் கூடாதுன்னு மோடி முதல் கமல் வரை ஆசைப்படறாங்க.

கட்டண சலுகை

கட்டண சலுகை

1989இல் ஜெயலலிதா மோசமாக நடத்தப்பட்டார் என்று மோடி இப்போ பேசிட்டு வர்றார்.. அதுக்கப்றம் பலமுறை முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, அதற்கு வழக்கு போடவில்லை. ஏன்னா, அந்த சம்பவம் உண்மையே கிடையாது.. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கலைஞர், கல்லூரியில் கட்டண சலுகை வழங்கினார். இப்போ ஸ்டாலின் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்கிறார்... இதுதான் ஓர் இயக்கத்தின் வளர்ச்சி என்பது!

இலவச திட்டம்

இலவச திட்டம்

நகர அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்கிற அறிவிப்பு இலவச திட்டம் அல்ல. இலவசங்கள் மக்களை சோம்பேறிகளாக்கிவிடாது.. அது பெண்களுக்கான மாபெரும் விடுதலை. தமிழ்நாட்டில் அனைத்து மத மக்களும் இணக்கமாக வாழ்ந்து வரும் நிலையில், மத வேறுபாட்டைத்தான் முதலில் நுழைக்கப் பார்கிறார்கள்.. இது பெரியார் மண்ணா என கேட்ட பாஜகவினர், இன்னைக்கு அப்படி பேச மாட்டாங்க.. அதேசமயம் வாக்கு பெற பெரியார் படத்திற்கு மாலை போடக் கூடஅவங்க தயங்க மாட்டாங்க.

பாஜக

பாஜக

ஆர்எஸ்எஸ் - பாஜக என்பது கொரோனாவை விட கொடியது... அது வேகமாக பரவக்கூடியது. அதை நாம் பரவவிடக்கூடாது... இப்போ, அதிமுக கூட்டணி ஒரு தொகுதியில் வென்றால்கூட, அது பாஜக ஜெயிச்சது போலதான்.. இந்த நாடு பாஜகவால்தான் உடையப்போகிறது... ஒரே மொழி, ஒரே கலாச்சாரத்தை திணித்தால் யாரும் தாங்க மாட்டாங்க.. இந்த தேர்தல் ஆரியத்திற்கும் - திராவிடத்திற்கும் நடக்கும் போர்.. இந்தத் தேர்தல் சித்தாந்தத்திற்கிடையே நடக்கும் சண்டை" என்றார்.

காட்டம்

காட்டம்

அதேபோல, நக்கீரன் இதழுக்கு அளித்த பேட்டியிலும் கரு.பழனியப்பனின் பாஜக எதிர்ப்பு பேச்சு காட்டமாக எதிரொலித்தது.. அந்த பேச்சு இணையத்திலும் தற்போது வைரலாகி வருகிறது.. அதன் ஓரிரு வரிகள் இதுதான்: "நாளைக்கு திமுக பாஜகவோடு சேர்ந்துவிடாது என்று என்ன நிச்சயம் என்று கேட்கிறார்களே.. இன்னைக்கு அதிமுக பாஜகவோடுதான் இருக்கு.. அதை முதல்ல பேசுவோம்.. அந்த கட்சி சேர்ந்தால் அப்பறம் பார்த்துக்குவோம்..

சிலிண்டர் விலை

சிலிண்டர் விலை

இன்னைக்கு நீ சிலிண்டர் விலையை குறைக்கலை இல்லை? நாளைக்கு அவங்க வந்தால் குறைப்பாங்களான்னு கேக்க கூடாது.. இன்னைக்கு நீ விலை குறைக்கல இல்லை? இவங்களை தள்ளுவோம் வெளியே.. அப்பறம் பேசுவோம் அந்த பஞ்சாயத்தை. இங்கே என்ன தெரியுமா பிரச்சனை, 10 வருஷடமா இல்லாத திமுக வந்துட கூடாது என்பதில் எல்லாரும் கவனமா இருக்காங்க.

நூலகம்

நூலகம்

ஏன்னா, இது வந்தால் மக்கள் நலன் பற்றி பேசிடும்.. வந்தா நூலகம் கட்டும்.. நீங்க இவ்வளவு காலம் இருந்தீங்க இல்லை, ஒரே ஒரு நூலகம் காட்டுங்க பார்ப்போம்.. இந்த தமிழ்நாடு மொத்தத்துக்கும் ஒரு நூலகம் கட்டுங்க... கட்டினதையும் உள்ளே வர விடாமதான் பண்ணீங்க.

இந்துக்கள்

இந்துக்கள்

திமுக தலைவர்கள் நாத்திகம் பேசுற ஆள்தான்.. சாமி கும்பிடாத ஆள்தான்.. ஆனால் ஆத்திகம் பேசும் எல்லாரையும் பத்திரமாக பாதுகாத்தாங்க.. யார் இந்துக்களுக்கு எதிரானவங்க.. இந்துசமய அறநிலையத்துறை குழுவில், பட்டியல் இனத்தவர் ஒருத்தர் இருக்கணும்னு சொன்னதே கலைஞர்தான்.. இப்போ இவங்களுக்கு சிக்கல் என்னன்னா, இந்த திமுக என்ன எல்லாரையும் சமமாக்குதே..ன்னுதான் பிரச்சனையே.. "நான் மேலே, நீ கீழே" என்பதுதான் அவங்க தத்துவமே...' என்று அந்த கரு.பழனியப்பனின் பேச்சு தொடர்கிறது.

English summary
DMK supporter and Director Karu Palaniappan says about BJPs policies
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X