மோடி ஊழல்வாதியா? அவர் நேர்மையானவர், தூய்மையானவர்! கொந்தளித்த இந்நாள் திமுக ஆதரவாளர் ராமசுப்ரமணியன்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி உலகின் மிக மோசமான 10 ஊழல்வாதிகளில் ஒருவர் என வெளிநாட்டு ஆய்வு ஒன்றில் கூறப்பட்டிருந்ததற்கு பிரபல திமுக ஆதரவு விவாத பேச்சாளர் ராமசுப்ரமணியன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
தொலைக்காட்சியில் தினசரி விவாத நிகழ்ச்சிகள் தொடங்கியதில் இருந்தே அரசியல் விமர்சகர், பாஜக ஆதரவாளர், கல்வியாளர், பொருளாதார அறிஞர், வலதுசாரி என பல முகங்களுடன் பேசி வந்தவர் ராமசுப்பிரமணியன்.
தொடர்ந்து பல்வேறு விவகாரங்களில் பாஜகவுக்கு ஆதரவாகவும் திமுகவுக்கு எதிராகவும் காட்டமாக பேசி வந்தார்.

பாஜகவிலிருந்து நீக்கம்
இந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாஜகவில் இருந்து ராமசுப்ரமணியன் நீக்கப்பட்டார். அப்போதைய பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்தும் பாஜக நிர்வாகிகள் குறித்தும் இவர் தவறுதலாக தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசியதாக கூறி கட்சி நடவடிக்கை எடுத்தது. அதன்பின் தமிழிசை சவுந்தரராஜனை விமர்சனம் செய்து ராமசுப்ரமணியன் சில இடங்களில் பேட்டி அளித்தார்.

திமுகவுக்கு ஆதரவு
பின்னர் பாஜகவின் தேர்தல் நிலைப்பாடுகளையும் விமர்சனம் செய்து வந்த ராமசுப்பிரமணியன் திமுகவின் தேர்தல் அறிக்கையில் அவர்கள் எடுத்த சில முக்கிய முடிவுகள் ஆகியவற்றை ஆதரித்து தொலைக்காட்சிகளில் பேசினார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கை தொலைநோக்கு பார்வையுடன் உள்ளது. அதற்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் கொடுப்பேன். திமுகதான் கண்டிப்பாக தேர்தலில் வெல்லும். திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்று முதல்வராக ஸ்டாலின் அரியணையில் அமருவார் என்று பேசி இருந்தார்.

முதலமைச்சர் குழுவில் இடம்
தொடர்ந்து தொலைக்காட்சி விவாதங்களில் திமுகவுக்கு ஆதரவாக பேசி வந்த ராமசுப்ரமணியனுக்கு தமிழ்நாட்டில் கோவில்களை மேம்படுத்தவும், புனரமைக்கவும் வழி செய்யும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்ட தனிக்குழுவில் ராமசுப்ரமணியன் இடம்பெற்று இருந்தார். அண்மையில்கூட திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனையை பட்டியலிட்டு அற்புதமான தமிழகம் உருவாக அடித்தளம் அமைக்கும் ஆட்சி' என்ற தலைப்பில் ராமசுப்ரமணியன் எழுதிய கட்டுரை முரசொலியில் பிரசுரிக்கப்பட்டு இருந்தது.

மீண்டும் மோடிக்கு பாராட்டு
இந்த நிலையில், இன்று பிரதமர் மோடியை பாராட்டி ராமசுப்ரமணியன் பேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதில், "ஏதோ ஒரு வெளிநாட்டு ஆய்வில் நமது பிரதமர் திரு. மோடி அவர்களை உலகில் மிக மோசமான பத்து ஊழல்வாதிகளில் ஒருவர் என்று தெரிவித்தது கண்டு மிகவும் திகைத்துப் போனேன். வருத்தம் கொஞ்ச நஞ்சமல்ல. அரசியல் ரீதியாக அவரைக் குற்றம் சொல்லலாம். ஆனால் அவர் நேர்மையை ஒரு துரும்பு அளவு கூட சந்தேகிக்க இயலாது. நம் பிரதமர் லஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லாத தூய்மையாளர் என்று அனைத்து இந்தியர்களும் பெருமிதம் கொள்ளும்போது இப்படிப்பட்ட ஆய்வுகளின் பின்னணி என்ன?
-
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்!












Click it and Unblock the Notifications