கேஸ், பெட்ரோல் விலை வட இந்தியர்களை பாதிப்பதில்லை.. அதனால்தான் பாஜக ஜெயிக்கிறது! இப்படி ஒரு தியேரி
சென்னை: கேஸ், பெட்ரோல் விலை வட இந்தியர்களை பாதிப்பதில்லை அதனால் தான் பாஜக ஜெயிக்கிறது என திமுக ஆதரவு சமூக வலைதளவாசிகள் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜக வெற்றிபெற்ற போது வேதாளன் என்பவர் வெளியிட்ட எக்ஸ் சமூக வலைதளப் பதிவு நேற்று முதல் மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், இந்தப் பதிவை திமுக ஆதரவாளர்கள் ரீ டிவிட் செய்து வருகிறார்கள். இதனிடையே வேதாளன் என்பவர் எழுதிய அந்தப் பதிவில் அப்படி என்னதான் உள்ளது என்ற விவரம் பின்வருமாறு;

*பெட்ரோல், டீசல் விலை உயர்வு அங்கே எந்தத் தாக்கமும் ஏற்படுத்தாது. ஏனெனில், முக்கால்வாசி மக்களிடம் வண்டியே இல்லை.
*கேஸ் விலை உயர்வு அங்கே எந்தத் தாக்கமும் ஏற்படுத்தாது. ஏனெனில், முக்கால்வாசி மக்கள் விறகு/மாட்டுச்சாண வறட்டி வைத்து சமைக்கிறார்கள்.
*வேலையில்லா திண்டாட்டம் அங்கே எந்தத் தாக்கமும் ஏற்படுத்தாது. ஏனெனில் முக்கால்வாசி மக்கள் வெளிமாநிலங்களில் குறைந்த கூலியில் நிறைவான வாழ்க்கை வாழ்கிறார்கள்.
*கொரோனா பரவல் அங்கே எந்தத் தாக்கமும் ஏற்படுத்தாது. ஏனெனில், அங்கே கொரோனா சிகிச்சை பெற்று குணமடைய தரமான மருத்துவமனைகளே கிடையாது.
*GST வரி எந்தத் தாக்கமும் ஏற்படுத்தாது. ஏனெனில், குட்கா, பான்மசாலா, பீடா போன்ற போதைப் பொருட்கள் விலை ஏறாமல் அதே விலைக்கு பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கிடைக்கிறதே.
*உயர்தர அரசு மருத்துவமனைகள், உயர்கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இல்லாதது எந்தத் தாக்கமும் ஏற்படுத்தாது. இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலின் செமி ஃபைனலாக பார்க்கப்பட்ட ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் ஃபைனல் மேட்சான 2024 பொதுத் தேர்தலிலும் தாங்கள் தான் வெற்றிபெறுவோம் என பாஜகவினர் உற்சாகமாக வலம் வருகின்றனர்.
இவ்வாறு திமுக ஆதரவாளர்கள் பதிவிட்டு வந்தாலும், வட மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றபோது இதே லாஜிக்கை ஏன் சொல்லவில்லை என்று பாஜக ஆதரவாளர்கள் பதில் கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications