50+ கேள்விகள்.. வீடு வீடாக கொட்டும் பண மழை.. ஸ்டாலின் இறக்கிய திட்டம்.. உளவுத்துறை எடுக்கும் சர்வே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு ஆளும் திமுக பல்வேறு சர்வேக்களை எடுக்க தொடங்கி உள்ளது. அதில் சமீபத்தில் புதிய சர்வே பணிகள் ஒன்று தொடங்கி உள்ளதாம். உளவுத்துறை மூலம் எடுக்கப்படும் இந்த தேர்தல் சர்வேயில் 50+ கேள்விகள் கேட்கப்படுகிறதாம்.

லோக்சபா தேர்தலுக்கு திமுக தீவிரமாக தயாராகி வருகிறது. ஏற்கனவே மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர். கூட்டணி பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்து வருகின்றன. அதேபோல் பூத் கமிட்டி நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுவிட்டனர். பூத் கமிட்டி சார்பாக வாக்காளர்களை சந்திக்கும் பணிகளை திமுக தொடங்கிவிட்டது.

DMK takes survey with 50+ questions on the various schemes done by Stalin Government

சர்வேக்கள்: இந்த நிலையில்தான் கோவை, சென்னை, சேலம், திருச்சி, மதுரை போன்ற பெருநகரங்களில் முதல் கட்டமாக ஆளும் திமுக சார்பாக உளவுத்துறை சில சர்வேக்களை நடத்தி வருகிறது. இன்னொரு பக்கம் பூத் கமிட்டி நிர்வாகிகள் முக்கியமான சர்வே ஒன்றை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர்.

பூத் கமிட்டி நிர்வாகிகள் நடத்தும் சர்வேயில்.. மக்களின் பூர்வீகம், வீடு, நிதி விவரங்களை கேட்பார்கள். இதில் ஜாதி தொடர்பான விவரங்களையும் சேகரிக்க உள்ளனராம். ஜாதி எண்ணிக்கையில் எத்தனை பேர் உள்ளனர் என்பதை தெரிந்து கொள்வதற்காக இந்த கணக்கெடுப்பை திமுக எடுக்கிறதாம். தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களை நிறுத்துவது தொடங்கி பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவதை வரை பல விஷயங்களில் கவனம் செலுத்தும் விதமாக திமுக இந்த கணக்கெடுப்பை கையில் எடுக்கிறதாம்.

எம்பிக்கள்: லோக்சபா தேர்தலுக்கான பணிகளை கடந்த சில நாட்களாகவே திமுக தீவிரமாக செய்து வருகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக 38 இடங்களில் வென்றது. புதுச்சேரியில் 1 இடத்தில் வென்றது. இதே வெற்றியை இந்த முறை தமிழ்நாட்டில் பதிவு செய்வதற்கான தீவிரமான பணிகளை திமுக முன்னெடுத்து வருகிறது,.

40க்கு 40 இடங்களில் வெல்ல வேண்டும் என்று டார்கெட் வைத்து திமுக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தல் பணிகள் திமுகவிற்கு பெரிய அளவில் பலன் கொடுக்கும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுக கூட்டணியில் மொத்தம் 20 புதிய தலைகள் களமிறக்கப்படலாம் என்கிறார்கள். அதாவது திமுகவில் இருந்து 10 புதிய தலைகள், மற்ற கூட்டணி கட்சிகளில் இருந்து 10 புதிய தலைகள் என்று மொத்தம் 20 பேர் களமிறக்கப்படுவார்கள். திமுகவில் எம்பியாக இருக்கும் 10 பேருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

கனிமொழி, ஆ ராசா, தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன் , டி ஆர் பாலு உள்ளிட்ட 10 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும். மக்கள் இடையே பிரபலம் இல்லாத 10 பேருக்கு வாய்ப்பு இல்லை. கூட்டணியில் ஏற்கனவே எம்பியாக இருக்கும் நபர்களில் 10 பேருக்கு வாய்ப்பு கொடுக்க கூடாது என்று கூட்டணி கட்சிகளுக்கு திமுக சொல்லும் என்று தகவல்கள் வருகின்றன. திமுக உள்வட்டார சர்வே மூலம் இந்த முடிவை எடுத்து உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

புதிய சர்வே: இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க.. அதில் சமீபத்தில் புதிய சர்வே பணிகள் ஒன்று உளவுத்துறை தொடங்கி உள்ளதாம். அதன்படி சமீபத்தில் சென்னை, நெல்லை, தூத்துக்குடி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு நிவாரணமாக ரூ. 6000 வழங்கப்பட்டது.

அதேபோல் பெண்களுக்கு ரூ. 1000 கலைஞர் உரிமை தொகை வழங்கப்படுகிறது. இது போக தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்பட்டது. எல்லா ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது.

1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் மக்கள் இடையே எவ்வித மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் இதனால் பயன் அடைந்தது எப்படி என்பது தொடர்பாக 50+ கேள்விகளை கேட்டு சர்வேவை தமிழ்நாடு அரசு எடுக்க உள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+