அய்யோ.. பாத்து பாத்து! தொண்டர் மீது மோதச் சென்ற கார்! பதறி போன திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன்!
சென்னை : திமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் மாற்றுத்திறனாளியான திமுக தொண்டரின் மீது மோதுவது போல் சென்றதால் பதறிப்போனார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15 வது உட்கட்சி பொதுத் தேர்தல் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் ஒன்றிய, நகர ,பேரூர் மற்றும் பகுதி கழக செயலாளர் மாவட்ட, மாநகர கழக செயலாளர் மற்றும் நிர்வாகிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தொடர்ந்து தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் தணிக்கை குழு உறுப்பினர்களுக்கும் வேட்பு மனு தாக்கல் ஏழாம் தேதி வழங்கப்பட்டது.

திமுக பொதுக்குழு
ஏற்கனவே மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவிகள் நியமனம் நடைபெற்ற நிலையில் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பொறுப்புக்கு டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் திமுக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அடங்கிய பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகே உள்ள செயின் ஜார்ஜ் பள்ளி விங்ஸ் கான்வென்சன் சென்டரில் நடைபெற்றது.

மு.க.ஸ்டாலின்
திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான ஆற்காடு வீராசாமி தேர்தல் நடத்தும் ஆணையராக நியமிக்கப்பட்ட நிலையில் தலைவர் பதவிக்கு யாரும் போட்டியிடாததால் இரண்டாவது முறையாக திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்படுவதாக ஆற்காடு வீராசாமி அறிவித்தார். இதேபோல பொதுச்செயலாளராக துரைமுருகன் பொருளாளராக டிஆர் பாலு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதே போல கனிமொழி ஐ பெரியசாமி கே என் நேரு உள்ளிட்டோர் திமுக துணை பொது செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

தமிழச்சி தங்கப்பாண்டியன்
திமுக பொதுக்குழுவை முன்னிட்டு திமுக சார்பில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வாழை மர தோரணங்கள் கட்டப்பட்டு திமுக பொதுக்குழுவுக்கு வந்த தொண்டர்களுக்கு பல வகையான அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டது. முன்னதாக திமுக பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்காக எழுத்தாளரும் திமுக எம் பி யுமான தமிழச்சி தங்கபாண்டியன் தனது காரில் வந்தார். கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்த அவரது கார் மெதுவாக ஊர்ந்து சென்றது அப்போது மாற்றுத்திறனாளியான திமுக தொண்டர் ஒருவர் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் பொது குழு கூட்டத்தை பார்ப்பதற்காக வந்து கொண்டிருந்தார்.

பதறிப்போன தமிழச்சி
அப்போது தமிழச்சி தங்கபாண்டியனின் கார் அவர் மீது மோதுவது போல் சென்றது. இதனை பார்த்து பதறிப்போன தமிழச்சி தங்கபாண்டியன் பார்த்து பார்த்து கவனமாக ஓட்டுங்க என தனது ஓட்டுநரிடம் தெரிவித்தார். நல்வாய்ப்பாக கார் தொண்டர் மீது மோதாத நிலையில் தமிழச்சி தங்கபாண்டியன் நிம்மதி அடைந்தார் தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications