முந்திரிக்கொட்டை அமைச்சர்..அதை இன்னும் நீங்க மறக்கலையா?.. என்ன உதயநிதி ஸ்டாலின் இப்படி சொல்லிட்டாரே!
தமிழகத்தில் ஒரு முந்திரிக்கொட்டை அமைச்சர் இருக்கிறார் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கரூரில் பேசியது பெரிய வைரலாகி உள்ளது.
சென்னை: தமிழகத்தில் ஒரு முந்திரிக்கொட்டை அமைச்சர் இருக்கிறார் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கரூரில் பேசியது பெரிய வைரலாகி உள்ளது.
திமுக கட்சி சார்பாக கரூரில் முக்கிய விழா நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினரும் கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி மூலம் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் மாற்று கட்சியை சேர்ந்த இளைஞர்கள் பலர் திமுகவில் இணைந்தார்கள்.
அதிமுக, பாமக, தேமுதிக, பாமக உறுப்பினர்கள் பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு திமுகவில் இணைந்தார்கள். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இவர்கள் எல்லோருக்கு உறுப்பினர் அட்டை கொடுத்தார்.

உதயநிதி ஸ்டாலின்
இதையடுத்து திமுக தொண்டர்கள் முன்னிலையில் பேசிய உதயநிதி ஸ்டாலின். டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. ஒரு அரசு வேலை கிடைத்தால் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்றுதான் இளைஞர்கள் நினைப்பார்கள். ஆனால் அதிலும் கூட இந்த அதிமுக அரசு மோசமாக முறைகேடு செய்துள்ளது. இளைஞர்களின் வாழ்க்கையில் அதிமுக விளையாண்டு இருக்கிறது.

திமுகதான்
அதற்கும் குரல் கொடுத்த ஒரே கட்சி திமுக தான்.இதற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று முதலில் கேட்டது திமுக தலைவர் ஸ்டாலின்தான். தற்போது சிபிசிஐடி விசாரணை நடந்து வருகிறது. சிலரை கைது செய்துள்ளனர். ஆனால் இதெல்லாம் கண்கட்டி வித்தை. பொறுப்பில் உள்ளவர்கள்தான் இந்த மோசடியை செய்தது.

சிலர் இருக்கிறார்கள்
பொறுப்பில் இருக்கும் சிலர்தான் இந்த முறைகேட்டை செய்து இருக்கிறார்கள்.முறையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். இதை செய்ய வேண்டும் என்றால் உடனே திமுக சொன்னது போல சிபிஐ விசாரணையை தொடங்க வேண்டும். ஆனால இதை சொன்னால் முந்திரிக்கொட்டை அமைச்சருக்கு கோவம் வரும். உடனே வந்து அவர் பேட்டி கொடுப்பார்.

யார் என்று தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா? இன்னும் தெரியவில்லையா? என்னது டயர் நக்கியா? அட அவர் வேற? அதை இன்னுமா மறக்காம வச்சு இருக்கீங்க ?அவர் தேர்தல் வரும் போது வருவார். மீண்டும் டயரை நக்கிக் கொண்டு வருவார். அவருக்கு தேர்தல் வரும் போதுதான் அரசியல் ஞாபகம் வரும். அப்போதுதான் அவர் அரசியல் செய்வார்.

மக்கள் பாடம் 4
அவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். நான் சொல்வது வேறு ஒரு முந்திரிக்கோட்டை அமைச்சர் பற்றி. அவர் எதற்கெடுத்தாலும் செய்தியாளர்களை கூப்பிட்டு தவறாக பேட்டி அளிப்பார்.மைக்கை நீட்டினாலே போதும் பேட்டி கொடுத்துவிடுவார். பாதி நேரம் மெயின் ரோட்டில் வைத்து கூட பேட்டி கொடுப்பார்., என்று உதயநிதி ஸ்டாலின் தனது பேச்சில் கிண்டல் செய்துள்ளார்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
உங்களுக்கு எதிராதான் பேசி இருக்காரு! விஜயுடன் துரை வைகோ பேசியது என்ன? நைசாக விசாரித்த உதயநிதி












Click it and Unblock the Notifications