திமுக "குறுநில" மன்னர்கள் வாரிசுகளுக்கு நோ எம்பி சீட் - கனவில் மண்ணை அள்ளிப் போடுகிறார் "மாமன்னன்"?
சென்னை: லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதற்கு திமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. திமுகவின் லோக்சபா தேர்தல் வேட்பாளர் பட்டியல்தான் இப்போது திமுக சீனியர்களிடையேயான விவாதப் பொருளாக இருந்து வருகிறது.
ஆட்சி எப்படி? : தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் அமர்ந்து இரண்டரை ஆண்டுகளாகிவிட்டன. இந்த இரண்டரை ஆண்டுகால ஆட்சி குறித்து படுதீவிரமாக திமுக தலைமை ஆராய்ந்து வருகிறது. ஆட்சிக் காலத்தில் எங்கே எங்கே சரிவு இருக்கிறது என்பதை கண்டறிந்து சரி செய்யும் நடவடிக்கைகளை முழுவீச்சில் முடுக்கிவிட்டிருக்கிறது திமுக தலைமை.

சர்ச்சை வேட்பாளர்கள்: இன்னொரு பக்கம், லோக்சபா தேர்தலுக்கான அடிப்படை பணிகளையும் தொடங்கி இருக்கிறது. முதலில் உத்தேச வேட்பாளர் பட்டியல் ஒன்றை திமுக தலைமை தயாரித்திருக்கிறதாம். கடந்த காலங்களில் திடீர் பணக்காரர்கள், குறுநில மன்னர்களின் பரிந்துரைகள் மட்டும்தான் வேட்பாளர்களாக களமிறக்கப்ப்ட்டனர். உதாரணமாக திண்டுக்கல் லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட வேலுச்சாமி குறித்து அப்போதே பல விமர்சனங்கள் எழுந்தன. திமுகவுக்கும் வேலுச்சாமிக்கும் என்ன தொடர்பு என்கிற கேள்வி எழுந்தது. ஆந்திராவில் நிதி நிறுவனம் நடத்தி வந்த வேலுச்சாமி திண்டுக்கல்லில் போடியிட வைக்கப்பட்டு எம்பியானார். இதேபோல பல உதாரணங்கள் 2019 லோக்சபா தேர்தலில் இடம்பெற்றிருந்தன.
மாமன்னன் முடிவு: இதே பார்முலாவில் சில பல கணக்குகளுடன் திமுகவின் குறுநில மன்னர்களாக இருக்கும் மாவட்ட செயலாளர்கள், மூத்த அமைச்சர்கள் இருந்து வருகின்றனர். தங்களுக்கு தோதான பணம் படைத்த தொழிலதிபர்கள், தங்கள் வீட்டு வாரிசுகள் என ஆளுக்கு ஒரு கணக்குப் போட்டு தலைமையிடம் சீட் வாங்குவதற்கு முயற்சித்து வருகின்றனர். ஆனால் திமுக தலைமையோ இதைப்பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் மும்முரமாக உத்தேச வேட்பாளர் பட்டியலைத் தயாரித்து கொண்டிருக்கிறது. இப்பட்டியலில் குறுநில மன்னர்கள் வாரிசுகள் 'சப்சேடாக' ஒதுக்கப்பட்டுவிட்டனராம். இப்பட்டியல் யாருமே எதிர்பாராத வகையில்தான் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக திமுகவின் இளைஞரணி நிர்வாகிகள், சற்று பண வசதி படைத்த கட்சிக்காரர்கள் என்கிற கேட்டகிரியில் இந்த லிஸ்ட் உருவாக்கப்பட்டுள்ளதாம். இப்படி குறுநில மன்னர்களின் "மாபெரும்" கனவுகளுக்கு "மாபெரும்" ஆப்பு வைத்ததே "மாமன்னன்" தான் என்கின்றன திமுக வட்டாரங்கள்.
-
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications