தமிழக சட்டசபை தேர்தல்: திமுக 109; அதிமுக 101; இழுபறி 24.. இது ரங்கராஜ் பாண்டேவின் எக்ஸிட் போல்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக 109 இடங்களிலும் அதிமுக 101 இடங்களில் வெல்லும் வாய்ப்புகள் உள்ளதாகவும் 24 தொகுதிகள் இழுபறியாக இருப்பதாகவும் பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா யூ டியூப் சேனல் எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
தமிழகம், புதுவை, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநில சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவுகள் முழுமையாக நிறைவடைந்தன. இதனையடுத்து நேற்று இரவு தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் இதுவரை வெளியான கருத்து கணிப்புகள் அனைத்திலும் திமுக அணி, ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை (118) இடங்களைப் பெறும்; அதிகபட்சமாக 195 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றும் என தெரிவித்துள்ளன. அதிமுக கூட்டணிக்கு 40 தொகுதிகள் முதல் அதிகபட்சமாக 70 தொகுதிகள் வரை கிடைக்கலாம் எனவும் எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்திருந்தன.

பாண்டேவின் எக்ஸிட் போல்
இதேபோல் பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே நடத்தி வரும் சாணக்யா யூ டியூப் சேனல் சார்பாகவும் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியிடப்பட்டன. ஒவ்வொரு தொகுதி வாரியாக யார் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்பதில் தொடங்கி எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்? முதல்வராக யாருக்கு ஆதரவு என்பது உள்ளிட்டவை இந்த எக்ஸிட் போல் முடிவுகளில் இடம்பெற்றிருந்தன.

திமுகவுக்கு 109 இடங்கள்
இதன்படி திமுக 109 இடங்களையும் அதிமுக 101 இடங்களையும் கைப்பற்றுமாம். 24 தொகுதிகளில் இழுபறி நிலைமை இருக்கிறது என்கிறது சாணக்யாவின் எக்ஸிட் போல். தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் திமுகவுக்கு 110; அதிமுகவுக்கு 95 இடங்கள் கிடைக்கும்; 29 இடங்கள் இழுபறியாக இருக்கும் என சாணக்யா தெரிவித்திருந்தது.

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு
யார் முதலமைச்சராக வரவேண்டும் என்று நினைக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமிக்கு 46.09% பேரும் மு.க. ஸ்டாலினுக்கு 44.45% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனராம். மற்றவர்களுக்கு 9.46% ஆதரவு இருப்பதாக கூறுகிறது பாண்டேவின் சாணக்யா யூ டியூப் சேனல் கணிப்பு.

திமுகவுக்கு ஆதரவு
அதேநேரத்தில் எந்த கட்சி வெற்றி பெறும் என்று நினைக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு திமுக கூட்டணி வெல்லும் என 49.59% பேரும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என 44.26% பேரும் கருத்து தெரிவித்துள்ளனராம். இதுவரை வெளியான கருத்து கணிப்புகளில் திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கூட கிடைக்காது என்பதை பூடகமாக சொல்லுகிறது ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா யூ டியூப் சேனல் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பதவியே வேண்டாம்.. தீயணைப்பு ஆணைய தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்த மாஜி டிஜிபி சங்கர் ஜிவால்! -
வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்! -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
தமிழ்நாட்டு தலைக்கு மேல் கத்தி.. ஏடாகூடமான எல் நினோ! கொஞ்சம் பிசகினாலும் போச்சு! பறந்த வார்னிங்! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
Ration Cards: தமிழகத்தில் 46 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் ரெடி! எப்போது கிடைக்கும்? -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்! -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள் -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங்












Click it and Unblock the Notifications