ஒட்டுமொத்த திமுக பட்டாளம் களமிறங்குது.. நீட்-க்கு எதிரான கையெழுத்து இயக்கம்- நாளை சென்னையில் ஆலோசனை!
சென்னை: தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்துவது தொடர்பாக திமுக இளைஞரணி, மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணியினர் நாளை ஆலோசனை நடத்த உள்ளனர். இதனைத் தொடர்ந்து திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை முன்னெடுக்க உள்ளனர்.
நீட் தேர்வு என்பது நாட்டின் ஒடுக்கப்பட்ட, கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை வாங்கக் கூடியது. நீட் தேர்வில் மிக அதிக மதிப்பெண் பெற்றால் அரசு மருத்துவ கல்லூரியில் இடம்; நீட் தேர்வில் தேர்ச்சியே பெறாமல் மிக மிக குறைவான மதிப்பெண் பெற்றால் பணம் கொடுத்து மருத்துவ படிப்பு படிக்கலாம் என்பதுதான் நிலை என்கின்றனர் கல்வியாளர்கள்.

தமிழ்நாடு, ராஜஸ்தான், மகாராஷ்டிரா என பல மாநிலங்களில் நீட் தேர்வின் மூலம் மருத்துவ கனவை பறிகொடுத்த மாணவர்கள் உயிரை மாய்த்து கொள்கிற துரோகம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் திமுக சார்பாக நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்தியக்கம் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவர் அணி செயலாளர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ, மாணவர் அணி செயலாளர் சிவிஎம்பி எழிலரசன் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் நாளை சென்னையில் நீட் தேர்வு கையெழுத்து இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தமிழ்நாட்டின் கல்வி உரிமையையும் - நம் மாணவர்களின் மருத்துவராகும் கனவையும் சிதைத்து வருகிற நீட் தேர்வுக்கு முடிவு கட்டிட திராவிட மாடல் அரசும், தி.மு.கழகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டின் கல்வி உரிமையையும் - நம் மாணவர்களின் மருத்துவராகும் கனவையும் சிதைத்து வருகிற நீட் தேர்வுக்கு முடிவு கட்டிட திராவிட மாடல் அரசும், தி.மு.கழகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
— Udhay (@Udhaystalin) October 17, 2023
அந்தவகையில் @dmk_youthwing - @dmk_studentwing - @MedicalwingDMK இணைந்து கடந்த ஆகஸ்ட்… pic.twitter.com/N2bKsuS41l
அந்தவகையில் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி
இணைந்து கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடத்திய உண்ணாநிலை அறப்போரை தொடர்ந்து, நீட் தேர்வுக்கு எதிரான மாபெரும் கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கவுள்ளோம்.
இந்த முயற்சியை மக்கள் பங்கெடுப்புடன் நடத்திடும் வகையில், இளைஞர் அணி - மாணவர் அணி - மருத்துவ அணி மாவட்ட- மாநகர அமைப்பாளர்களுடனான இணைய வழி கலந்தாலோசனை கூட்டம் நாளை (18-10-2023) மாலை நடைபெறவுள்ளது.
அணிகளின் தலைவர்கள் இணை - துணை செயலாளர்கள் முன்னிலையில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக்கூட்டத்தில், நிர்வாகிகள் அனைவரும் தவறாது பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications