Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆபரேஷன் வெஸ்ட்.- உதயநிதிக்கு காத்திருக்கும் அக்னி பரீட்சை... கொங்கு கோட்டையில் திமுக கொடி பறக்குமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதிக்கு கூடுதல் பொறுப்பாக கொங்கு கோட்டையில் விழுந்த ஓட்டைகளை சரி செய்யும் பணி கொடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது மிகவும் சவாலான பணி; ஜாதி, பணம், சீனியர், வாரிசு என்றெல்லாம் பார்க்காமல் சாட்டையை உதயநிதி சுழற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்கின்றனர் அக்கட்சி சீனியர்கள்.

தமிழகத்தில் திமுகவுக்கு மிகப் பெரும் சவாலாக இருந்து வருகிறது கொங்கு மண்டலம்தான். அதிமுகவின் கோட்டைதான் கொங்கு மண்டலம் என்பதை இப்போதைய தேர்தலும் நிரூபித்துக் காட்டுகிறது.

இந்த பின்னடைவை எதிர்கொண்டு முறியடித்தாக வேண்டிய நெருக்கடியில் திமுக உள்ளது. இதனால் கொங்கு மண்டலத்தில் அதிதீவிரமான கவனத்தை ஒட்டுமொத்த திமுகவும் செலுத்தி வருகிறது.

பின்னடைவு ஏன்?

பின்னடைவு ஏன்?

கொங்கு மண்டலத்தைப் பொறுத்தவரை காலம் காலமாக அதிமுகதான் ஆதிக்கம் செலுத்திய பகுதி என்பதெல்லாம் எதுவும் இல்லை. திமுகவின் கோட்டைகளாகவே இன்னமும் தொகுதிகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் சொந்த கட்சிக்காரர்களே சூனியம் வைத்துவிடுவதால்தான் இத்தகைய பின்னடைவு என்கிறார் சீனியர் நிர்வாகி ஒருவர்.

அன்றைய கொங்கு திமுக

அன்றைய கொங்கு திமுக

இது தொடர்பாக கொங்கு மண்டல திமுகவினரிடம் நாம் பேசியபோது, 1977-க்குப் பிந்தைய திமுகவை கணக்கில் எடுத்துக் கொண்டால் அப்போது கண்ணப்பன் அணி அவருக்கு எதிர் அணிகள் என்பதாக மட்டுமே இருக்கும். பெரிய அளவு கோஷ்டிப் பூசல் இருந்தது இல்லை. அந்த எதிர்ப்பு அணியில் ராமநாதன், சிடி தண்டபாணி இருந்தனர். இருந்தபோதும் கட்சி, தேர்தல் என்று வந்துவிட்டால் எந்த மனக்கசப்பும் இல்லாமல் ஒருங்கிணைந்து பாடுபட்டு வெற்றியை தேடி தந்தனர்.

உச்சகட்ட கோஷ்டிகள்

உச்சகட்ட கோஷ்டிகள்

ஆனால் 1990களில் பொங்கலூர் பழனிசாமி தலையெடுத்த பின்னர் கட்சியின் ஒட்டுமொத்த கட்டமைப்பும் போக்குமே தலைகீழாக மாறிப் போனது. இதன் உச்சமாக சொல்வதானால் கோவைக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வந்தபோதே, மூத்தவரான சிடி தண்டபாணியை பொங்கலூர் பழனிசாமி செருப்பால் அடித்த சம்பவம் நிகழ்ந்தது. அதேபோல் ஒவ்வொரு கிளையிலும் திட்டமிட்டு போட்டி கோஷ்டிகள் உருவாக்கப்பட்டன. அதுநாள் வரை கட்சிக்குப் பாடுபட்டவர்களை எதிர்த்தே தங்களது செல்வாக்கை நிலைநிறுத்த இந்த கோஷ்டிகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன.

சிதறிக் கிடக்கும் கிளை கழகம்

சிதறிக் கிடக்கும் கிளை கழகம்

இதனால் பொள்ளாச்சி ராஜீ, பல்லடம் பொன்முடி, மேட்டுப்பாளையம் அருண்குமார், திருப்பூர் செல்வராசு என பலரும் படாதபாடு வேண்டியதாயிற்று. இந்த போராட்டம் இன்னமும் நீடிக்கிறது. பொதுவாக திமுகவில் கிளை கழகம் வலிமையாக இருக்கும்; கிளை கழகம்தான் தொடங்கிதான் மாவட்ட செயலாளர் வரை ஒவ்வொரு படிநிலையாக தேர்தல்கள் நடத்தப்பட்டு வந்தன. அதனால் கிளைக் கழகம் வலிமையாக இருந்தது. ஆனால் இப்போது தலைகீழாக மாவட்ட செயலாளர்தான் அத்தனை நியமனங்களையும் செய்கிறார். இதனால் கிளைகழகத்துக்கு வேலையும் இல்லை; கிளை கழகமோ ஒவ்வொரு ஊரிலும் 10, 15 கோஷ்டிகளாக அமீபா போல சிதறிக் கிடக்கிறது,

தேர்தல் தோல்வி ஏன்?

தேர்தல் தோல்வி ஏன்?

மேலும் சட்டசபை தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் திமுகவினரே சொந்த கட்சியின் வேட்பாளர்களை தோற்கடிக்கவும் காரணமாகவே இருந்தார்கள். உதாரணமாக பொள்ளாச்சி தொகுதியில் டாக்டர் வரதராஜனை திமுக நிறுத்தியது. ஆனால் சீட் தமக்கே என எதிர்பார்த்த நெகமம் கந்தசாமி பேரனும் அவரது ஆதரவாளர்களும் தேர்தல் பணிகளில் இருந்து ஒதுங்கினர். இதனால் சொற்ப ஓட்டுகளில் தோற்றுப்போனார் டாக்டர் வரதராஜன். நெகமம் பகுதியில் திமுகவுக்கு ஓட்டுக்களே வரவில்லை.

தொண்டாமுத்தூர் நிலவரம்

தொண்டாமுத்தூர் நிலவரம்

அதேபோல் தொண்டாமுத்தூர் தொகுதியிலும் ஏழெட்டு பிரமுகர்கள் இருக்கின்றனர். இந்த ஏழெட்டு பேரும் ஆளுக்கு ஒரு காரணத்தை சொல்லி திமுகவினரையே பணி செய்யவிடாமல் தடுத்துவிட்டனர். இதனால்தான் கார்த்திகேய சிவசேனாபதி தோற்கடிக்கப்பட்டார். அதாவது சொந்த கட்சியினராலேயே கார்த்திகேய சிவசேனாபதி தோற்கடிக்கப்பட்டார் என்பதுதான் துயரம். இந்த களநிலவரங்கள் அனைத்தும் ஒவ்வொருமுறையும் திமுக தலைமைக்கு போய்க் கொண்டுதான் இருக்கிறது. விசாரணையும் நடத்தப்பட்டு கிடப்பில் போட்டுவது ஏன் என்பதுதான் தெரியவில்லை.

ஜாதி, பணம்

ஜாதி, பணம்

கொங்கு திமுகவப் பொறுத்தவரை இப்போது ஜாதி, பணம் மட்டும்தான். ஜாதியும் பணமும் இருந்தாலே திமுகவில் எந்த நிலைக்கும் வந்துவிடலாம் என்பதற்கு உதாரணம் மருதமலை சேனாபதிக்கு கொடுக்கப்பட்ட மா.செ. பதவி. அவருக்கு கிளை கழக செயலாளர் பதவிக்கு கூட தகுதி இல்லை; ஆனால் ஜாதி, பணம் கையில் இருந்தது. சாதிக்க முடிகிறது என்கின்றனர்.

சாட்டை சுழற்றனும்

சாட்டை சுழற்றனும்

இந்த முறை கொங்கு மண்டலத்தை சீரமைக்க களமிறக்கப்பட்டுள்ள உதயநிதி, சீனியர்கள்- வாரிசுகள், ஜாதி, பணம் என்ற பேதம் எதனையும் பார்க்காமல் கண்ணை மூடிக் கொண்டு சாட்டையை சுழற்றி திமுக கட்டமைப்பை தலைகீழாக மாற்றித்தான் ஆகவேண்டும். பச்ச தண்ணியும் டீயும் குடித்து வேலை பார்க்கிற அந்த அடிமட்ட தொண்டனுக்கான அங்கீகாரத்தை தயக்கம் இல்லாமல் திமுக தலைமை கொடுக்க வேண்டும். அப்போதுதான் உதயநிதியின் இந்த ஆபரேஷன் வெஸ்ட் என்பது வெற்றி பெறும். இல்லை எனில் உதயநிதிக்கும் கோவை சறுக்கலையே பரிசாகக் கொடுத்துவிடும் என்றும் சுட்டிக் காட்டுகின்றனர் அந்த சீனியர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+